தண்ணீரில் நின்று கலக்கலான போட்டோஷூட்... வைரலாகும் மம்முட்டி புகைப்படம் !

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் ஆக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மம்முட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தண்ணீரில் நின்றவாறு கலக்கலான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் மம்முட்டி.

மிகச்சிறந்த நடிகராக

மிகச்சிறந்த நடிகராக

தமிழில் தளபதி, மறுமலர்ச்சி, கார்மேகம், ஆனந்தம் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமாக உள்ள மம்முட்டி இந்திய அளவில் அனைவராலும் உற்று நோக்கப்படும் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வாழ்த்துக்களை தெரிவித்து

வாழ்த்துக்களை தெரிவித்து

இந்நிலையில் சமீபத்தில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொரானா ஊரடங்குக்கு மத்தியிலும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அட்டகாசமான புகைப்படம்

அட்டகாசமான புகைப்படம்

இவ்வாறு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மம்முட்டி ஒரு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இன்றும் இளமையுடன்

இன்றும் இளமையுடன்

முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு அறையில் பிங்க் கலர் கோட் சூட்டை அணிந்துகொண்டு செம ஸ்டைலிஷாக இன்றும் இளமையுடன் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மேன்லினசுடன் நீரில் நின்றவாறு டேபிளின் மேல் சாய்ந்து கொண்டு மம்முட்டி வெளியிட்டுள்ள இந்த அட்டகாசமான புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X