Mammootty: இதயம் நிறைஞ்சிடுச்சு.. நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட மம்முட்டி!

கொச்சி: நடிகர் மம்முட்டி லீட் கேரக்டரில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள படம் கண்ணூர் ஸ்குவாட்.

படம் தற்போது சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Actor Mammootty thanks for the response for his recent movie Kannur Squad

படத்தில் காவல்துறை அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ளார். வழக்கம்போல அவரது நடிப்பு ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது.

கண்ணூர் ஸ்குவாட் படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு மம்முட்டி நன்றி: நடிகர் மம்முட்டி மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை பெற்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதுடன் தனியாகவும் ஹீரோவாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மம்முட்டி. இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் மலையாளத்தில் வெளியாகி வருகின்றன.

Actor Mammootty thanks for the response for his recent movie Kannur Squad

இதனிடையே நேற்று முன்தினம் மம்முட்டி லீட் கேரக்டரில் நடித்துள்ள கண்ணூர் ஸ்குவாட் படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. ராபி வர்க்கீஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜார்ஜ் மார்ட்டீன் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் மம்முட்டி. படத்தில் மம்முட்டியில் நடிப்பு ரியல் போலீசாரை கண்முன்னே நிறுத்துவதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்துள்ளன.

அடுத்தடுத்து மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம், சிபிஐ 5 போன்ற படங்கள் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், நேற்று முன்தினம் வெளியாகியுள்ள கண்ணூர் ஸ்குவாட் படமும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது. படத்தில் மம்முட்டியுடன் ரோனி டேவிட், கிஷோர், அசீஸ் நெடுமங்காடு உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்துள்ளனர்.

Actor Mammootty thanks for the response for his recent movie Kannur Squad

கேரளாவின் முக்கியமான பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் மற்றும் அதை கண்டுபிடிக்க களமிறங்கும் மம்முட்டி உள்ளிட்டோர் என இந்தப் படத்தின் கதைக்களம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன. முன்னதாக சிபிஐ 5 படத்திலும் இதேபோன்ற கதைக்களத்தில் மம்முட்டி நடித்துள்ள போதிலும், கதைக்களத்திலும் காட்டி அமைப்பிலும் கண்ணூர் ஸ்குவாட் அவருக்கு வித்தியாசமான மற்றும் சிறப்பான படமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தின் வசூல் முதல் நாளிலேயே சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது மிகச்சிறந்த கலெக்ஷனை எடுத்துள்ள படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் வரவேற்பு தன்னுடைய மற்றும் படக்குழுவினரின் இதயங்களை நிறைத்துள்ளதாக மம்முட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் ஒவ்வொருவரின் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X