பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி.. 'பிக்சர் ஆஃப் தி டே' என கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் மம்முட்டி தனது பேத்திக்கு தலைவாரிவிடும் போட்டோ வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. கடந்த 40 ஆண்டுளுக்கும் மேலாக சினிமாவில் கோலொச்சி வருகிறார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலிஷ் என பல மொழிகளிலும் தடம் பதித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருதுகள்

பத்மஸ்ரீ விருதுகள்

இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்முட்டி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்று முறையும், கேரள அரசின் விருதுகளை 6 முறையும் பெற்றுள்ளார். மேலும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி அவரை கவுரவித்துள்ளது.

கடைசியாக தமிழில் பேரன்பு

கடைசியாக தமிழில் பேரன்பு

தமிழில் அழகன், தளபதி, மவுனம் சம்மதம், மக்கள் ஆட்சி, புதையல், மறுமலர்ச்சி, எதிரும் புதிரும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் பேரன்பு படத்தில் நடித்தார் மம்முட்டி.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் துல்கர், தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

ஓ காதல் கண்மணி, சோலோ மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரும் ஹிட்டான நிலையில் தற்போது ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார் துல்கர்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள துல்கர் சல்மான் அவ்வப்போது தனது போட்டோக்கள், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது.

பேத்திக்கு தலைவாரும் மம்முட்டி

பேத்திக்கு தலைவாரும் மம்முட்டி

அதாவது நடிகர் துல்கர் சல்மான் தனது அப்பாவான நடிகர் மம்முட்டி தனது மகளுக்கு தலை வாரிவிடும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த போட்டோவை வாழ்த்துகளுடன் பதிவிட்டுள்ளார் துல்கர்.

பிக்சர் ஆஃப் தி டே

பிக்சர் ஆஃப் தி டே

இந்த போட்டோ இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் க்யூட் என்றும் அன்பை உணர முடிகிறது என்றும் பதிவிட்டுள்ளனர். பலரும் பிக்சர் ஆஃப் தி டே என்று பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X