கொரோனாவால் முடங்கிய வாழ்வாதாரம்.. பிறந்தநாளில் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய பிரபல நடிகர்!
சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கஷ்டப்படும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு பிரபல நடிகர் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் உச்சத்தில் உள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடிகர் மஞ்சு மனோஜ்
அதன் ஒருபகுதியாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் .

குழந்தை நட்சத்திரம்
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ். தெலுங்கு சினிமாவில் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சு மனோஜ் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அத்தியாவசியப் பொருட்கள்
இந்நிலையில் மஞ்சு மனோஜ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு வறுமையில் தவிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளில் மட்டுமின்றி
தனது பிறந்த நாளில் மட்டுமின்றி இந்த உதவியை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார் நடிகர் மஞ்சு மனோஜ். லாக்டவுனால் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு இந்த உதவியை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார் மஞ்சு மனோஜ்.

அஹம் பிரம்மஹம்சி
மஞ்சு மனோஜின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகர் மஞ்சு மனோஜ் தற்போது அகம் பிரம்மஹம்சி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











