Manikandan: திரையரங்கில் லவ்வர் படம் பார்த்த மணிகண்டன்.. கொண்டாடிய ரசிகர்கள்!
சென்னை: நடிகர் மணிகண்டனின் லவ்வர் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. மணிகண்டனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான குட்நைட் படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது லவ்வர் படம். ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் படத்துடன் இந்தப் படம் மோதியது. படம் குறித்து மிகுந்த கான்ஃபிடன்சுடன் படக் குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக தன்னுடைய இயல்பான நடிப்பால் குட்நைட் படத்தை சூப்பர்ஹிட் படமாக மாற்றிய மணிகண்டனின் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
தற்காலத்தில் காதலர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது. காதலனின் அதிகப்படியான பொசசிவ்னஸ் காரணமாக காதலி சந்திக்கும் அடுத்தடுத்த பிரச்சினைகள், அதையொட்டி காதலை முறிக்க நினைக்கும் அவளது முடிவு தொடர்ந்து காதலனின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இவற்றை இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமான காட்சிகளுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. மணிகண்டனின் இயல்பான நடிப்பு, இசை உள்ளிட்டவை இந்தப் படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

நடிகர் மணிகண்டன்: நடிகர் மணிகண்டனின் குட் நைட் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகச்சிறந்த வெற்றியை பெற்றது. இந்த படம் தூக்கம் மற்றும் குறட்டை இவற்றை மையமாகக் கொண்டு வெளியாகி சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்நிலையில் அடுத்ததாக மணிகண்டன் மற்றும் ஸ்ரீகௌரி பிரியா நடிப்பில் கடந்த 9ம் தேதி லவ்வர் படம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துடன் இந்த படம் மோதியது. சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. காதல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
காதல் பிரச்சினைகள்: அதிகப்படியான பொசசிவ்னஸ் காரணமாக காதலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதையடுத்து காதலை முறிக்க முடிவெடுக்கும் நாயகி, அதிலிருந்து மீள நினைக்கும் காதலன் என இந்த படம் அடுத்தடுத்த சூழல்களை மையப்படுத்தி சிறப்பான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இயக்குனர்பிரபுராம் வியாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார், படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். முன்னதாக குட்நைட் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மணிகண்டன் இந்தப் படத்திலும் இயல்பான நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
திரையரங்கில் படம் பார்த்த மணிகண்டன்: இயக்குனர் கனவுடன் வலம்வரும் மணிகண்டன் அடுத்ததாக விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர் தன்னுடைய இயக்குனர் அவதாரத்தையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அவர் தற்போது நடித்துள்ள லவ்வர் படத்தினை ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். மிகக் குறுகிய காலத்திலேயே மணிகண்டனுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். திரையரங்கில் அவரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
ரசிகர்கள் கொண்டாட்டம்: அவருடன் இணைந்து லவ்வர் படத்தையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த படத்தை தொடர்ந்து மணிகண்டனின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவை குறித்தும் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். படத்தின் கதைக்களம் தற்போதைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தின் அருண் கேரக்டரில் மிகச்சிறப்பாக பொருந்தியுள்ளார் மணிகண்டன். உளவியல்பூர்வமாக இந்தக் கதையை அணுகியுள்ளார் இயக்குநர். அவரது முயற்சி சிறப்பானதாகவே இருந்தாலும் திரும்ப திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளை அவர் தவிர்த்திருந்தால் இந்தப் படமும் சிறந்த காதல் படங்களின் வரிசையில் இணைந்திருக்கும் என்பதே ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











