Manikandan: பயங்கரமா பொழைச்சிடுவான்.. மணிகண்டனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த 3 லட்சம்!
சென்னை: நடிகர் மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் ரிலீசாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு குடும்பஸ்தன் படும் கஷ்டங்களை நகைச்சுவையாக இந்தப் படம் கொடுத்துள்ள நிலையில், படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ள மணிகண்டனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் குடும்பஸ்தன் படமும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் கலெக்ஷனே சிறப்பாக அமைந்முள்ளது. தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை இந்தப் படத்தின்மூலம் மணிகண்டன் கவர்ந்துள்ளார்.

நடிகர் மணிகண்டன்: நடிகர் மணிகண்டன் ரேடியோ ஜாக்கியாகத்தான் தன்னுடைய கேரியரை துவங்கினார். தொடர்ந்து சீரியல்கள், திரைப்படங்களிலும் ரஜினி, கமல், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் டப்பிங் பேசியுள்ளதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் சண்டை காட்சிகளிலும் சிறப்பு சப்தங்கள் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மணிகண்டன் நடிப்பில் முன்னதாக குட் நைட், லவ்வர் படங்கள் வெளியாகி பெரியளவில் ஹிட்டடித்தன. இந்தப் படங்கள் இவரை ஹரீஷ் கல்யாண், அசோக் செல்வன் போன்ற வளர்ந்துவரும் நடிகர்கள் பட்டியலில் இடம்பெற செய்துள்ளன.
குடும்பஸ்தன் படம்: இதனிடையே தற்போது மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள குடும்பஸ்தன் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. படம் சிறப்பான திரைக்கதையுடன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. முதல் நாள் வசூலும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு குடும்பஸ்தன் படும் கஷ்டத்தை காமெடியாக இந்தப் படம் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிமூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார் மணிகண்டன். இந்தப் படத்திற்காக அவர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்ட நிலையில் அவரது இயல்பான பேச்சு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய் சேதுபதியுடனான நட்பு: இந்நிலையில் மணிகண்டன் கொடுத்துள்ள பேட்டியொன்றில் நடிகர் விஜய் சேதுபதியுடனான தன்னுடைய நட்பை மிகச்சிறப்பாக பேசியுள்ளார். முன்னதாக விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள மணிகண்டன், இந்தப் படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். இந்தப் படம் வசனத்திற்காக மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே காதலும் கடந்து போகும் படத்தின்போது தான் விஜய் சேதுபதியுடன் தனியாக பேசும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை மழைதான் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி கொடுத்த சர்ட்டிபிகேட்: தொடர்ந்து தன்னிடம் உற்சாகமாக பேசிய விஜய் சேதுபதி, மழை நின்றபின்பும் தன்னுடன் நீண்ட நேரங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தான் கூறாமலே தன்னுடைய தங்கையின் சிறிய அளவிலான ஆபரேஷனுக்கும் அவர் வந்து உதவியதாகவும் தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கு தான் முறையாக அழைக்காதபோதும் அவர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியதாகவும் தன்னுடைய பெற்றோரிடம் அதெல்லாம் சிறப்பாக பொழைச்சுக்குவான், சந்தோஷமாக இருங்க என்று நம்பிக்கை கொடுத்ததாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கைகொடுத்த விஜய் சேதுபதி: தொடர்ந்து வெளியில் வந்து தான் மறுத்த நிலையிலும் தன்னிடம் 3 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு சென்றதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். அந்தப் பணம் இல்லையென்றால் திருமணத்திற்காக தான் மேலும் கடன் வாங்கியிருப்பேன் என்றும் மணிகண்டன் விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடந்த இந்த சம்பவத்தை மணிகண்டன் தன்னுடைய பேட்டியில் சுவாரஸ்யமாக கூறியது ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











