லவ்வர் படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தையா.. மொத்தமாக தூக்கிய சென்சார் போர்ட்!

சென்னை: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு பல இடத்தில் கத்திரிப்போட்டு தூக்கி உள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தான் மணிகண்டன். இவர், ரஜினிகாந்த நடித்த காலா படத்தில் அவரின் மகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து ஓரளவிற்கு தெரிந்த முகமாக மாறிய மணிகண்டன், ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது நல்ல கதையை தேடி தேடி நடித்து வரும் மணிகண்டனின் நடிப்பில் அண்மையில், குட்நைட் திரைப்படம் வெளியானது.

actor Manikandans lover movie censor board certificate

புதுமுக இயக்குநர் விநாயக் சந்திர சேகரன் இயக்கத்தில் உருவான குட் நைட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் குவித்து தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக குட் நைட் திரைப்படம் அமைந்தது.

மணிகண்டனின் லவ்வர்: குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது லவ்வர் என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை, பிரபுராம் வியாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்திலும், மணிகண்டனே கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மாடர்ன் லவ் ஆந்தாலஜி தொடரில் நடித்து பிரபலமான ஸ்ரீகெளரி பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நடிகர் கண்ணாரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக உள்ளனர்.

கவனம் பெற்ற டிரைலர்: இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், காதலன் காதலிக்கும் வரும் பிரிவும், சண்டையுமே முதன்மையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ் சினிமா படங்களைப் போல இந்த படத்திலும் நாயகன் உருகி உருகி காதலிக்கிறான். காதலி டாட்டா காட்டிவிட்டு போவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ப்ரீவ்யூ ஷோவில் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

கெட்ட வார்த்தைகள் நீக்கம்: இந்நிலையில் லவ்வர் படத்தில் இடம்பெற்றுள்ள 18 கெட்ட வார்த்தைகளை நீக்க தணிக்கை குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சில இடத்தில் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு மியூட் போட்டுக்கொள்ளுமாறு தணிக்கை உத்தரவிட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலை மையமாக கொண்ட படத்திற்கு எதற்கு இத்தனை கத்திரி என இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X