Lover movie: 21வது பிறந்தநாள் 21 கிப்ட்.. லவ்வர் படத்தின் க்யூட் ஸ்னீக் பீக்!

சென்னை: குட்நைட் என்ற படத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தில் இவரது இயல்பான நடிப்பு படத்தை வெற்றிப்படமாக்கியது. குறைவான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் நல்ல வசூலை பெற்றது. குறட்டையை மையமாக கொண்டு சிறப்பான திரைக்கதையுடன் வெளியான இந்தப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது லவ்வர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் இன்னும் 3 நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

லவ்வர் படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி நடித்துள்ளார். மேலும் கண்ணா ரவி, ஹரீஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி, நிகிலா சங்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. படம் ரிலீசாக இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள், போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

Actor Manikantans Lover movie sneak peak released

மணிகண்டனின் குட்நைட் படம்: நடிகர் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறட்டையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் மணிகண்டனின் இயல்பான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது லவ்வர் என்ற தன்னுடைய அடுத்தப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மணிகண்டன். படத்தில் மணிகண்டனுக்கு ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி ஜோடியாக நடிததுள்ளார். மேலும் கண்ணா ரவி, ஹரீஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி, நிகிலா சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

9ம் தேதி ரிலீஸ்: வரும் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் டீசர், டிரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படம் இன்னும் 3 நாட்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மணிகண்டனுடனான தன்னுடைய காதல் கதையை கௌரி பிரியா விளக்குவது போல அமைந்துள்ளது. தன்னுடைய 21வது பிறந்தநாளுக்கு 21 கிப்ட் கொடுத்து அசத்தியதை அவர் கூறுவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது.

காதல் குறித்து நாயகி: கண்களால் பேசிய தங்களது காதல் எப்படி அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றது என்பது குறித்தும் இந்த வீடியோவில் கௌரி பிரியா பேசுகிறார். காதல் மற்றும் காதலர்களுக்கிடையிலான பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. பிரபு ராம் வியாஸ் இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும் குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் லவ்வர் படத்தையும் தயாரித்துள்ளது. மணிகண்டன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறா. ஆனாலும் அவரது விருப்பம் படங்களை இயக்குவதே என்பதையும் அவர் தெரிவித்து வருகிறார்.

விஜய் சேதுபதியை இயக்கும் மணிகண்டன்: அடுத்ததாக விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி தன்னுடைய படத்தை பார்த்து தொலைபேசிமூலம் பாராட்டியதாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். நல்ல படங்களை பாராட்டும் வழக்கமுடையவர் உதயநிதி என்றும் தன்னுடைய படம் சிறப்பான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அவரது பாராட்டு கொடுத்துள்ளதாகவும் மணிகண்டன் மேலும் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X