மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!

சென்னை : நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 67 படத்திலும் மனோபாலா முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் சிறப்பான பல படங்களை இயக்கியவந்த மனோபாலா தற்போது காமெடி கேரக்டர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் மனோபாலா

நடிகர் மனோபாலா

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருப்பவர் மனோபாலா. ஒரு காலகட்டத்தில் பிரபல இயக்குநராக பிசியாக கோலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருந்த மனோபாலா, தற்போது பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 தளபதி 67 படத்தில் மனோபாலா

தளபதி 67 படத்தில் மனோபாலா

தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 67 படத்திலும் மனோபாலா முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். முதல் நாள் சூட்டிங்கில் பங்கேற்ற அவர், படத்தின் அப்டேட்டை வெளியிட்டு அடி தூள் என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அந்தப் பதிவினை நீக்கினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மனோபாலா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மனோபாலா

படங்களில் நடிப்பதுடன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று கோமாளிகளிடம் மாட்டிக் கொண்டு திண்டாடினார். நிகழ்ச்சியில் தன்னுடைய குக்கிங் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோபாலாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் தற்போது ஓய்வில் உள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நலம் விசாரித்த பூச்சி முருகன்

நலம் விசாரித்த பூச்சி முருகன்

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் உடல்நலன் தேற வேண்டும் என்றும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத் துணைத்தலைவர் பூச்சி முருகன் மனோபாலாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X