எங்களை ஏமாத்திட்டிங்க அண்ணா.. துரோகம் பண்ணிட்டீங்க.. கதறிய நடிகர் மனோ பாலா!
சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியம் தங்களையெல்லாம் ஏமாத்திவிட்டு சென்றுவிட்டதாக நடிகர் மனோபாலா கதறியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார்.
இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

கண்ணீர்
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

துக்கம் தொண்டையை அடைக்க
இந்நிலையில் எஸ்பிபியின் மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான மனோபாலா கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றில் அவரது நினைவு குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது பேசவே முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க எங்களை ஏமாற்றிவிட்டார்.

ஏமாற்றிவிட்டார்
வந்து விடுவார் என நம்பியிருந்தோம் எங்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என கதறினார் மனோ பாலா. தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் மாஸ்க் அணிந்தப்படி கதறல் வீடியோவை வெளியிட்டுள்ளார் மனோபாலா.

எப்படி மனசு வந்துச்சு
அதிலும் அதையே பேசியுள்ள மனோபாலா எப்படி மனசு வந்துச்சு எங்களை விட்டுச்செல்ல என உருக்கமாய் கேட்டுள்ளார். மனோபாலா இயக்கத்தில் வெளியான படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம். இருவரும் சகோதர பாசத்துடன் பழகி வந்துள்ளனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.


Click it and Unblock the Notifications











