twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்பளை நாமளே முதல்ல பாதுகாத்துக்கணும்... வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட மனோபாலா

    |

    சென்னை : கோவிட் -19 பரவலையடுத்து தமிழக அரசு அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் முழு லாக்டவுனை இன்றுமுதல் அமல்படுத்தியுள்ளது.

    இதையொட்டி நேற்றைய தினம் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சிறிய கடைகளிலும் இதேநிலை தான்.

    எனக்கு ரொம்ப பிடிக்கும்… ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவேன்... தகவலை பகிர்ந்த பூஜா ஹெக்டே !எனக்கு ரொம்ப பிடிக்கும்… ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவேன்... தகவலை பகிர்ந்த பூஜா ஹெக்டே !

    இதையடுத்து நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அலைமோதிய கூட்டம்

    அலைமோதிய கூட்டம்

    கொரோனா பரவலை தவிர்க்கும்வகையில் இன்று முதல் சில தினங்களுக்கு தமிழகத்தில் முழு லாக்டவுனை அமல்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று மற்றும் அதற்கு முன்தினம் கடைகள் முழுமையாக திறந்திருந்தது. இதையடுத்து அடுத்த சில தினங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    பெருங்கூட்டம்

    பெருங்கூட்டம்

    அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக் கொள்ள அனைவரும் பலசரக்கு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை அனைத்து கடைகளிலும் அலைமோதினர். சிறிய கடைகளிலும் பெருங்கூட்டத்தை காண முடிந்தது.

    வீடியோ வெளியீடு

    வீடியோ வெளியீடு

    இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மனோபாலா தனது வருத்தத்தை பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். கடைகளில் இத்தகைய அதிகமான கூட்டத்தை பார்த்தபோது தனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டதாக அவர் தன்னுடைய வீடியோவில் தெரிவித்திருந்தார்.

    Recommended Video

    Actor Ponnambhalam மருத்துவ செலவுக்காக 2 லட்சம் கொடுத்த Chiranjeevi
    மக்கள் அலட்சியம்

    மக்கள் அலட்சியம்

    சென்னையில் உள்ள மொத்த ஜனங்களும் சாலைகளில்தான் இருந்ததாகவும் தமிழக அரசு கொரோனாவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் மாஸ்க் கூட அணியாமல் அனைவரும் கடைகளின் முன்பு கூட்டம் கூட்டமாக நின்றிந்தது வேதனையை அளித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    சுய பொறுப்பு வேண்டும்

    நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நமக்கு சுய பொறுப்பு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்க்கை முறையாக அணிந்து நாம் வெளியில் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Manobala gets emotional on this COVID-19 lockdown situation
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X