அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்!

சென்னை: நடிகர் வடிவேலுவின் புகார் தொடர்பாக நடிகர் மனோ பாலா விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

வடிவேலுவை அசிங்க படுத்திய நடிகர் மனோபாலா

நடிகர் மனோ பாலா நடத்தி வரும் யுடியூப் சேனலுக்கு நடிகர் சிங்க முத்து பேட்டி அளித்தார். அப்போது வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதம் தற்போது வைரலாக அதைப்பற்றிய செய்திதான் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

தரக்குறைவாக

தரக்குறைவாக

அதாவது நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா தன்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் தன்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பதில் அளித்தார்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

மேலும் அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என கூறியிருந்தார் வடிவேலு. மேலும் இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அது நோக்கமில்லை

அது நோக்கமில்லை

இந்நிலையில் வடிவேலுவின் புகார் குறித்து நடிகர் மனோ பாலா விளக்கம் அளித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் என்னுடைய யூட்யூப் சேனலில் சிங்கமுத்து, வடிவேல் குறித்து பேசியதை ஏற்கனவே பல இடங்களில் பேசியிருக்கிறார். வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை.

நான் தயார் இல்லை

நான் தயார் இல்லை

வடிவேலு போன்ற ஒரு கலைஞனின் நட்பை இழக்கவும் நான் தயாராக இல்லை. அவர் இப்போது கோபமாக இருக்கிறார். கோபம் தனிந்ததும் இதுகுறித்து பேசுவேன். அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என கூறியுள்ளார் மனோ பாலா. ஆனால் இந்த புகார் குறித்து நடிகர் சிங்கமுத்து இதுவரை வாய் திறக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X