நடிகைகளுக்கு போட்டியாக நாள்தோறும் "கவர்ச்சி" போட்டோ.. அதகளப்படுத்தும் சீனியர் நடிகர்!
சென்னை: நடிகைகளுக்கு போட்டியாக சீனியர் நடிகர் ஒருவர் கவர்ச்சிப்போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகர் மனோபாலா இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், 40 படங்களை இயக்கியிருக்கிறார்.
19 டிவி சீரியல்களையும் இயக்கி இருக்கிறார். தொடர்ந்து நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார் மனோ பாலா.
டிவிட்டரில் ஆக்ட்டிவ்
இளம் நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் டஃப் கொடுத்து வருகிறார் நடிகர் மனோ பாலா. டிவிட்டர் வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர் மனோ பாலா, அவ்வப்போது நடிகைகளை போன்று தனது போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

மும்பையில் மனோபாலா
நடிகர் நடிகைகளின் பிறந்த நாள் மற்றும் புது படங்களின் ரிலீஸ் என்றால் மறக்காமல் வாழ்த்து தெரிவித்து வருகின்றார் மனோபாலா. இந்நிலையில் நடிகர் மனோபாலா மும்பையில் இருந்தப்படி தனது போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.
டபுள் மீனிங்
ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது அந்த போட்டோ. அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன சார் காலையிலேவா என டபுள் மீனிங்கில் கலாய்த்துள்ளனர்.
பார் பயங்கரமா இருக்கு..
அய்யோ பாவா.. என்ன பாவா இது பார் பயங்கரமா இருக்கு என்று கலாய்க்கிறார் இவர்.
புதிதாக க்ரீம்
மரியாதைக்குரிய மனோபாலா அண்ணா கழுத்துக்கு கீழ் உங்களுக்கு சுருக்கம் இருக்கிறது முகத்தில் சுருக்கம் இல்லை என்றால் எதுவும் புதிதாக கிரீம் மீதும் வந்திருக்கிறதா அழகாக இருக்கிறீர்கள் சும்மாதான் கேட்டேன் என்று கலாய்த்திருக்கிறார் இவர்.
அழகா இருக்கீங்க..
அழகாக உள்ளீர்கள் என்று தெரிவித்திருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











