நீ கலக்கு சித்தப்பு.. மனோபாலா போட்ட ஒத்த டிவிட்.. மளமளவென குவிந்த நெட்டிசன்ஸ்.. என்னா ரெஸ்பான்ஸு!
சென்னை: நடிகர் மனோபாலா பதிவிட்ட ஒத்த டிவிட்டை பார்த்த
நெட்டிசன்கள் அவரது பக்கத்தில் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
மனோ பாலா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். தமிழ் சினிமாவில் இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 19 டிவி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இசை வெளியீடு..
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மனோ பாலபா அவ்வப்போது சக நட்சத்திரங்களுக்கு பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூறுவது, புதுப்படம் ரிலீஸ் என்றால் வாழ்த்து கூறுவது, இசை வெளியீடு என்றால் வாழ்த்து கூறுவது என ரகளை செய்து வருகிறார்.

கொஞ்சமும் அசருவதில்லை
அதுமட்டுமின்றி ஹீரோயின்களுக்கு போட்டியாக கலக்கல் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். என்ன மாதிரியான கமெண்ட்ஸ் வந்தாலும் கொஞ்சமும் அசருவதில்லை மனோ பாலா.

தேனியில் மனோபாலா
அதேநேரத்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார் மனோ பாலா. அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். இந்நிலையில் தான் தேனியில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மனோ பாலா.

நீ கலக்கு சித்தப்பு
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது டிவிட்டர் பக்கத்தில் குவிந்து கமெண்டுகளை குவித்து வருகின்றனர். மனோ பாலாவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், நீ கலக்கு சித்தப்பு என பதிவிட்டுள்ளார்.

பிரச்சாராமா தலைவா?
மற்றொரு ரசிகரான இவர் பிரச்சாரமா தலைவா என்று கேட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக பேச்சாளரான மனோ பாலா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

எங்க வீட்டுக்கு வாங்க
இன்னும் சில நெட்டிசன்கள், சொர்க்க பூமியான எங்கள் ஊருக்கு வருக வருக என பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் அப்படியே எங்கள் ஊருக்கு வந்துவிட்டு போங்கள் கம்பம் பக்கம்தான் என கேட்டு கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











