Manobala :கர்ச்சீப்பை போட்ட மனோபாலா.. இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு பெற்றது குறித்த ஸ்டேட்மெண்ட்!

சென்னை : நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், இன்று காலை அவரது உடல் வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இயக்குநராக 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள மனோபாலா, நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம்வந்த மனோபாலாவின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

Actor Manobala joins with Actor Kamal haasans Indian 2 movie and he points out about the movie in his throwback video

இந்தியன் 2 பட வாய்ப்பு குறித்து மனோபாலா பழைய வீடியோ : நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுடன் வலம்வந்தவர் மனோபாலா. அவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கணக்கான படங்களில் காமெடியனாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்துள்ளார். இயல்பான உடல்மொழியுடன் இவர் நடித்துள்ள எண்ணற்ற படங்கள் தற்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக காணப்படுகிறது. முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பால் நீண்ட மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் மனோபாலா. கடந்த மாதத்தில் அவருக்கு ஆஞ்சியோவும் செய்யப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய சாலிகிராமம் வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அவருக்கு நடிகர் விஜய், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்தனர். விஜய் சேதுபதி, சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனிடையே இன்று காலை மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் இறுதி ஊர்வலலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. உடன் பிரபலங்கள் பலர் சென்றனர்.

Actor Manobala joins with Actor Kamal haasans Indian 2 movie and he points out about the movie in his throwback video

தற்போது ஷங்கர் -கமல்ஹாசன் காம்பினேஷனில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் மனோபாலா நடித்துள்ளார். முன்னதாக விக்ரம் படத்தின் வெற்றிக்கு கமலை நேரில் சந்தித்து மனோபாலா வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில், கமல்ஹாசனோடு இருந்தவன், வளர்ந்தவன் என்ற முறையில் அவருக்கு தான் வாழ்த்து சொல்லாமல், யார் சொல்லுவார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து, அவருடன் இதுவரை நடிக்காத தான் அவரிடம் கர்ச்சீப் போட்டுவிட்டுவந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

எல்லாருடனும் நடித்துவிட்டதாகவும் கமல்ஹாசனுடன் எப்போது நடிக்கப் போகிறேன் என்று தான் அவரிடம் கேட்டதாகவும் அதற்கு கமல்ஹாசனும் பார்ப்போம் என்று கூறியதாகவும் இந்த வீடியோவில் மனோபாலா தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துள்ளார் மனோபாலா. ஆனால் அதை பார்க்கத்தான் அவர் தற்போது உயிருடன் இல்லை என்பது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இந்தியன் 2 படக்குழுவினருக்கும் சோகமான செய்தியாகவே உள்ளது. இந்தப் படம் துவங்கியபோது உயிருடன் இருந்த விவேக் மற்றும் மனோபாலா படத்தின் ரிலீசின்போது உயிருடன் இல்லை என்பது கோலிவுட்டில் மனவருத்தத்தை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X