அட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..!
சென்னை: நடிகர் மனோ பாலா, நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் போட்டோவை போட்டு பெயரை தப்பாக கூறி வாங்கிக்கட்டி வருகிறார்.
நடிகர் மனோ பாலா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். அதோடு டிவிட்டரிலும் படு சுறுசுறுப்பாக உள்ளார் மனோ பாலா.
புதுப்படம் என்றால் வெற்றி பெற வாழ்த்து தெரிவிப்பது, தனக்கு தெரிந்தவர்களின் பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூறுவது, பண்டிகை நாட்கள் என்றாலும் வாழ்த்து கூறி அசத்தி வருகிறார்.
நேற்று தம்பியுடன்
அதோடு தன்னோடு பணிபுரியும் நடிகர் நடிகைகளுடனும் போட்டோ எடுத்து அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று நடிகர் விஷாலுடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மனோ பாலா, தம்பியுடன் என கேப்ஷன் கொடுத்திருந்தார்.
நடிகை ஷ்ரத்தா கபூர்
இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் எடுத்த போட்டோவை மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அவரது பெயரை ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்று பதிவிடுவதற்கு பதில் ஷ்ரத்தா கபூர் என பதிவிட்டுள்ளார்.
ஏன் இந்த வேலை?
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் ஒன்றும் ஷ்ரத்தா கபூர் இல்லை ஷ்ரத்தா ஸ்ரீநாத் என கரெக்ட் செய்து வருகின்றனர். மேலும் பெயர் தெரியாமல் ஏன் இந்த வேலை என கேட்டு வருகின்றனர்.
தெரியாம பாத்துக்கோங்க
சிலர், மனோ பாலா சார் இந்த விஷயத்த ஷ்ரத்தா கபூருக்கு தெரியாம பார்த்துக்கோங்க என கலாய்த்துள்ளனர்.
எதிர்பார்ப்போ?
மேலும் சாருக்கு ஷ்ரத்தா கபூருடன் இப்படி போட்டோ எடுக்க ஆசையோ? அந்த எதிர்பார்ப்புதானா இது என்று கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











