அடப்பாவமே.. மனோபாலா ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து வந்து விழுந்த ஆபாச படங்கள்.. மேட்டரே வேறயாம்
சென்னை : நடிகர் மனோபாலாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர், காமெடியன் என பலமுகங்களைக் கொண்டவர் மனோபாலா. பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புக்கள் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி சினிமாவிற்குள் என்ட்ரி ஆனவர் மனோபாலா. இந்தி, கன்னடம் மொழிகளில் சில படங்களை இயக்கி உள்ளார்.
சன் டிவியில் அல்லி ராஜ்யம், ராஜபார்வை, மாயா, ஜீ தமிழில் செம்பருத்தி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார் மனோபாலா. சமீபத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, 14 வது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் மனோபாலா. சோஷியல் மீடியாவிலும் பிஸியாக இருக்கும் இவர் அடிக்கடி போஸ்ட் போட்டு, ரசிகர்களுடன் தனது படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான ஓ மை டாக், டான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மனோபாலாவின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்டதுடன் அதில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் கமெண்ட் மூலம் தங்களின் அதிர்ச்சியை தெரிவித்திருந்தனர்.
பிறகு மனோபாலாவின் ட்விட்டர் பக்கம் சரி செய்யப்பட்டு, அதில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பிரபலங்களின் சோஷியல் மீடியா பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது, முடக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











