சித்ராவின் மரணத்துக்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கு.. கண்ணீர்மல்க கூறிய பிரபல நடிகர்!

சென்னை: நடிகை சித்ராவின் மரணத்துக்கு பின்னால் மர்மம் இருப்பதாக நடிகரும் இயக்குநருமான மனோ பாலா தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா, சென்னை நசரத் பேட்டை அருகே உள்ளே ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவுடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தும் உடன் தங்கியிருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருமணம் முடிந்தது

திருமணம் முடிந்தது

இதில் ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் கடந்த அக்டோபர் மாதமே திருமணம் முடிந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சித்ராவின் தற்கொலை வழக்கை ஆர்டிஓ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

கோழை அல்ல

கோழை அல்ல

சித்ராவின் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பலரும் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என கூறி வருகின்றனர்.

உருக்கமான பதிவுகள்

உருக்கமான பதிவுகள்

சித்ராவின் மறைவுக்கு சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் உருக்கமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மனோபாலா அஞ்சலி

மனோபாலா அஞ்சலி

அவருடன் பணியாற்றிய பலரும் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையிர் நடிகரும் இயக்குநருமான மனோபாலாவும் சித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எதற்காக இந்த முடிவு?

எதற்காக இந்த முடிவு?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சகோதரி சித்ராவின் இழப்பு சின்னத்திரைக்கு மிகப்பெரிய இழப்பு. ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும் எனத் தெரியவில்லை என்றார். மேலும்
சித்ரா மாதிரி ரொம்ப தைரியமான பெண்ணைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் இந்த திடீர் முடிவு எடுத்தது எதற்காக? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிறைய இழப்புகள்

நிறைய இழப்புகள்

ஒவ்வொருவரையாக இழப்பது மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. சின்னத்திரையில் நிறைய இழப்புகள் நடக்கின்றன.
சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். வேலைப்பளுவை ரொம்பவே ஏற்றிக் கொள்ளாதீர்கள். வேலைப்பளுதான் உங்களுக்கு மனச்சுமையையும், வேதனையையும் கொடுக்கிறது.

சித்ரா மரணத்திற்கு பின்னால்

சித்ரா மரணத்திற்கு பின்னால்

தயவுசெய்து யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி எத்தனை நண்பர்கள் இருக்கிறோம். 1500க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறோம். அனைவருமே உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றார். மேலும் எல்லோர் சாவுக்கும் பின்னால் ஒரு மர்மம் இருக்கும் அதே போல் சித்ராவின் சாவுக்கு பின்னால் ஒரு மர்மம் இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X