ரஜினி மகளுக்கு மட்டுமல்ல.. இந்த பிரபல நடிகரின் மகனுக்கும் இன்று தான் டும் டும் டும்!

மனோபாலா மகன் ஹரீஷுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

Recommended Video

Actor Manobala son marriage: மனோபாலா மகன் திருமண விழா- வீடியோ

சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரீஷ் - பிரியா திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் தனக்கென காமெடி ஸ்டைலை உருவாக்கி நடித்து வருபவர் மனோபாலா. தாய்மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான மனோபாலா, இதைத்தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, சேது, நண்பன், துப்பாக்கி, காற்றின் மொழி என இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் அனைத்து முன்னனணி நடிகர்களுடனும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

அவரது ஒல்லியான உடல்வாகே அவருக்கு தனி அடையாளமாக அமைந்துள்ளது.

இயக்குநர்:

இயக்குநர்:

நடிகராக மட்டுமின்றி இதுவரை 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும், 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். பல வெற்றிப் படங்களையும் அவர் இயக்கியுள்ளார்

வாழ்த்து:

வாழ்த்து:

இந்நிலையில், அவரது மகன் ஹரீஷ்க்கும், பிரியா என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வரவேற்பு நிகழ்ச்சி:

வரவேற்பு நிகழ்ச்சி:

முன்னதாக நேற்று மாலையில் கிண்டியில் உள்ள சொகுசு ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், கவுண்டமணி, உதயநிதி, விவேக், சத்யராஜ், சிவகார்த்திகேயன், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத் என பலர் கலந்துகொண்டனர்.

ரஜினி மகள் திருமணம்:

ரஜினி மகள் திருமணம்:

ரஜினியின் மகள் சவுந்தர்யாவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது. எனவே, திரையுலகப் பிரபலங்கள் இந்த இரு நட்சத்திர வீட்டு திருமணங்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மனோபாலா ரஜினியுடன் சந்திரமுகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X