twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் மரணம்.. மக்களின் கோபத்தை பாலிவுட் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.. பிரபல நடிகர் வார்னிங்!

    |

    சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் மற்றும் பாலிவுட் மீதான மக்களின் கோபம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Sushant Singh Building CCTV footage June 13

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகளே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    டைட்டிலே செம சமாச்சாரமா இருக்கே.. சாந்தனுவின் 'முருங்கைகாய் சிப்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!டைட்டிலே செம சமாச்சாரமா இருக்கே.. சாந்தனுவின் 'முருங்கைகாய் சிப்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

    வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    சுஷாந்தின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுஷாந்துக்கு நெருக்கமானவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் மரணம் குறித்து ஒவ்வொரு நாளும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் மனோஜ் பாஜ்பாய்

    நடிகர் மனோஜ் பாஜ்பாய்

    பல பிரபலங்கள் சுஷாந்துடனான தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாய் சுஷாந்த் மரணம் மற்றும் பாலிவுட் மீதான மக்களின் கோபம் குறித்து பேசியுள்ளார்.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பொதுமக்கள் கோபப்படுவது ஏன் நியாயமானது என்றும் அதை பாலிவுட் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார். சுஷாந்துடன் 2019 ஆம் ஆண்டு வெளியான சோஞ்சிரியா என்ற படத்தில் நடித்துள்ளார் மனோஜ்.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    பாலிவுட்டில் உள்ள பாரபட்சம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிரபலங்கள் மக்களைப் புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் விமர்சனங்களையும் கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    பதிலளிப்பது முக்கியம்

    பதிலளிப்பது முக்கியம்

    கோபம் உங்களை நோக்கி வரும் போது, கேள்வி கேட்க வேண்டும், இல்லையா ?! எனது படம் வெற்றிபெறும்போது மக்கள் சொல்வது சரிதான் என்று கூறும் நான், அதே நபர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கும்போது, அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் முக்கியமானது. இதையேதான் அரசாங்கமும் செய்கிறது, என்றார்.

    வாரிசுகளை புறக்கணிக்க வேண்டும்

    வாரிசுகளை புறக்கணிக்க வேண்டும்

    சுஷாந்தின் மரணம் பாலிவுட்டில் வெளியில் இருந்து வருபவர்களுக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள் மற்றும் உள் நபர்களிடம் பாரபட்சம் காட்டும் விஷயத்தில் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் நடிகர் வாரிசுகளின் படங்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று ஆன்லைனில் கோப குரல் கொடுத்து வருகின்றனர்.

    அனைத்து உணர்ச்சிகள்

    அனைத்து உணர்ச்சிகள்

    ஏற்கனவே சுஷாந்த் மரணத்தின் போது நடிகர் மனோஜ் பாஜ்பாய் அவர் குறித்த உருக்கமாக பேசினார். 34 வயதில் ஒருவர் செய்ய வேண்டிய சாதனைகளை விட அதிகம் செய்திருக்கிறார். நம் எல்லோருக்கும உயர்வுகள் தாழ்வுகள் என அனைத்து உணர்ச்சிகளும் உள்ளது. சுஷாந்துக்கும் அவை இருந்தன.

    புத்திசாலி

    புத்திசாலி

    அவரை போல் நான் திறமைசாலி இல்லை. அவரை போன்று நான் புத்திசாலியும் இல்லை. 34 வயதில் அவர் செய்திருக்கும் சாதனையை நான் என்னுடைய 34 வயதில் செய்யவில்லை. என்னுடைய சாதனைகள் ரொம்பவே சிறியவை. சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல என உருக்கமாக கூறியிருந்தார்.

    English summary
    Actor Manoj Bajpayee says Bollywood should take people anger as serious on Sushant singh Rajput death. Sushant singh Rajput commited suicide on june 14th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X