எங்கே அந்த வெண்ணிலா.. கெட்டவார்த்தையில் திட்டிய அஜித்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்

சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோஜ் இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 47. இவரது மரண செய்தி அறிந்து திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா, நடிகை மீனா, நடிகர் சாந்தனு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், மனோஜ் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடலை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் அவர் பேசிய வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் கிடைத்தாலும் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. இதனை அவரும் பெரிய சோதனையாகவும் எடுத்துக்கொண்டதும். ஆனால், வாழ்வில் வெற்றி தோல்வி குறித்து மனம் திறந்து சமீபத்திய பேட்டிகளில் மனோஜ் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

actor-manoj-bharathiraja-passed-away-update

இழப்பின் வலி: இயக்குநரின் மகனாக இருந்துகொண்டு வெற்றி பெறவில்லை, நடிப்பு வரவில்லை என பலரும் கமாண்ட் அடித்து சென்றிடுவார்கள். அதற்கு ரொம்ப தன்மையாக, என் இடத்தில் இருந்து பார். மற்றவர்களிடம் வெளியே பேச வேண்டாம். இழந்தவனுக்கு மட்டும் தான் இழப்பின் வலி தெரியும் என கூறியுள்ளார். எனக்குத்தான் தெரியும் நான் என்ன கஸ்டப்படுகிறேன் என்று தெரியும். என்னடா இப்படி ரிஜெக்ட்டா இருக்குன்னு ஆரம்பத்தில் வலியாதான் இருந்தது. தூக்கி போடு உனக்குன்னு இருந்தால் வந்து சேரும் என்று போக போக ஈஸியாக எடுத்துக்கொண்டேன் என மனோஜ் கூறியுள்ளார்.

விஜயின் கண்கள்: நீலாங்கரையில் விஜய் வீட்டின் அருகே தான் மனோஜ் வீடும் இருக்கிறது. விஜய் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்த அவர், விஜய் ரொம்ப பிடிக்கும் எனக்கு பக்கத்து வீடுதான். அவர் மாதிரி யாரும் கஸ்டப்பட்டிருக்க முடியாது. அவரிடம் பிடித்ததே அவரது வசன உச்சரிப்புதான். ரொம்ப அழுத்தமா அந்த டயலாக்கை பேசுவார். வாழ்க்கை ஒரு வட்டம் ஜெயிக்கிறவன் தோற்பான், தோக்குறவன் ஜெயிப்பான் என்ற வசனம் பேசும்போது அவரோட கண்ணை பாருங்க என்று மனோஜ் பேசியிருந்தார். விஜய் பேசும் வசனம் சாெந்த அனுபவத்தில் இருந்து எடுத்துக்கொள்வார். அதுதான் அவரோட ஸ்பெஷன் என்றும் மனோஜ் கூறியிருக்கிறார்.

actor-manoj-bharathiraja-passed-away-update

கெட்டவார்த்தையில் பேசிய அஜித்: தனது சினிமா அனுபவம் குறித்து பேசி மனோஜ், தாஜ்மஹால் படப்பிடிப்பின் போது திருப்பாச்சி அருவாள பாட்டு முடிந்ததும் அதை அஜித் சாரிடம் போட்டு காண்பித்தேன். அவர் என்னை பார்த்து கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு, டேய் நாங்கலாம் கஷ்டப்பட்டு கிடக்கிறோம். உனக்கு ஈஸியா கிடைத்திருக்கு என்று ராெம்ப ஜாலியா கிண்டலாக பேசினார். இதை சர்ச்சையாக்க வேண்டாம். அஜித்திற்கு என் மீது தனிப்பாசம் இருக்கும் அவர் நீ கலக்கு நல்லாயிருக்கு என்று தெரிவித்ததாக மனோஜ் கூறியிருக்கிறார்.

actor-manoj-bharathiraja-passed-away-update

எங்கே அந்த வெண்ணிலா: மனோஜ் நடித்த படங்களில் 90்ஸ் கிட்ஸ்களை மட்டும் அல்ல சினிமா ரசிகர்களை கவர்ந்த படம் என்றால் வருஷமெல்லாம் வசந்தம் படம். இப்படத்தில் இடம்பெற்ற எங்கே அந்த வெண்ணிலா பாடலை பகிர்ந்து ரசிகர்கள் மனோஜிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படம் அவருக்கு மிகப்பெரிய பிரேக் காெடுத்த படம் என்றே சொல்லலாம். ரொம்ப சாதுவாக ஒருதலை காதலனாக வந்து அனைவரது இதயத்தையும் கவர்ந்தவர் இன்று உயிருடன் இல்லை என்பதை ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர். தாஜ்மஹாலில் சொட்ட சொட்ட நனையவைத்துவிட்டு கரைந்துபோனதாக கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். மீண்டும் அந்த வெண்ணிலா கையில் வராது என்றே தெரிந்தே சென்றுவிட்டாரோ என்றும் அன்புடன் பேச தொடங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X