ஊர்வசி மறுத்திருந்தால் அது நடந்திருக்காது.. கண்கலங்கிய முன்னாள் கணவர்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ஊர்வசி. கேரளாவில் பிறந்த ஊர்வசி, 1979ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் மகள் தேஜலட்சுமி, 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாக உள்ளார். பட நிகழ்ச்சியில் பேசி தேஜலட்சுமியின் தந்தை மகள் குறித்து கண்கலங்கி பேசி உள்ளார்.

நடிகை ஊர்வசி, பாக்யராஜ் இயக்கி 'முந்தானை முடிச்சு' படத்தில் பரிமளம் என்கிற ரோலில் நடித்த சினிமாவில் நடித்து பாராட்டை பெற்றார். அதைத்தொடர்ந்து, அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம் என அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார். 1984 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 15 படங்கள் வெளியானது. அந்த அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்தார் ஊர்வசி.

Urvasi manoj k jayan tejalakshmi
Photo Credit:

ஊர்வசியின் மகள்: இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் பிறந்த நிலையில், 2008ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவரது மகள் தேஜலட்சுமி, தனது தந்தை மனோஜ் கே ஜெயனுடன் இருந்து வருகிறார். தற்போது, தேஜலட்சுமி 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஊர்வசி மறுத்திருந்தால்: இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மனோஜ் கே ஜெயன், தேஜலக்ஷ்மி முதன் முதலில் தனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது என்று என்னுடைய மனைவி ஆஷாவிடம் தான் கூறினார். ஆஷா அம்மாவாக மட்டுமில்லாமல், நல்ல தோழியாகவும் இருந்தார். இருந்தாலும் அம்மாவான ஊர்வசியிடம் அனுமதி பெற்று வா என்று சென்னைக்கு அனுப்பி வைத்தேன். ஊர்வசி சம்மதித்ததால் தான், தேஜலக்ஷ்மி சினிமாவில் நடிகையாக நுழைந்து இருக்கிறார். ஒருவேளை தேஜலக்ஷ்மி நடிப்பதற்கு ஊர்வசி தடை போட்டு இருந்தால், அதில் என்னால் குறுக்கிட்டு இருக்க முடியாது. அந்த வகையில் ஊர்வசியும் மகளின் மனதை அறிந்து செயல்பட்டு இருக்கிறார் என மனோஜ் கே. விஜயன் கண் கலங்கி பேசினார்.

பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன், தமிழில் தளபதி, தூள், திருமலை, ஜனா, திருப்பாச்சி, திருட்டுப்பயலே, வில்லு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மனோஜ் கே. ஜெயன் நடிகை ஊர்வசி பிரிந்த பிறகு ஆஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகை ஊர்வசி உறவினராக சிவபிரசாந்த் என்பவரை தன்னுடைய 40வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X