21 நாள் தனித் தனியாத்தான் இருக்கணும்.. லூட்டி அடிக்கக்கூடாது.. மன்சூர் அலிகான் குசும்பு !

சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா விழிப்புணர்வு குறித்து வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

கொரோனாவிற்கு வீட்டுக்கு வீடு குவார்ட்டர் சரக்கு கொடுங்களேன்.. மன்சூர் அலிகான்

வில்லனாக , காமெடியனாக மன் சூர் அலிகான் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புவது சமூகப் போராளியாக தான். எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் சென்று, அந்த பிரச்சினை குறித்து விவாதிப்பார், தற்போது, நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பார்ப்பவர்களை சிரிக்க வைத்தாலும் இதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது.

Actor mansoor ali khan Corona video

அந்த வீடியோவில், மறைந்த சிலுக்கு ஸ்மிதாவுடன் அவர் மிக நெருக்கமாக அதாவது மிட்நைட் மசாலா பாடலுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரானோவிலிருந்து தற்காத்துக் கொள்ள வீட்டிலேயே இருங்கள். ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியை மெயிண்டெய்ன் பண்ணுங்கள் என்று அரசு விளம்பரப்படுத்தினாலும், உண்மை நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது. சமீப நாட்களில் மெடிக்கல் ஷாப்களில் காண்டம் விற்பனை மிகவும் சூடு பிடித்துள்ளது. WORK FROM HOME என்பதை வழக்கம்போல் நம் மக்கள் தவறுதலாக புரிந்துகொண்டு விட்டதாகவே தெரிகிறது.

Actor mansoor ali khan Corona video

அந்த பேராபத்திலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்த மன்சூர் அலிகான் தான் நடித்த 'தெய்வக் குழந்தை'படப்பாடல் ஒன்றில் சிலுக்கு ஸ்மிதாவுடன் கும்மாளம் போட்ட பாடல் ஒன்றை வெளியிட்டு அதில் கேப்சனாக

'21 நாள் வீட்டுல தனியாத்தான் இருக்கச் சொல்லியிருக்காங்க. இப்படியெல்லாம் கூத்தடிக்கக்கூடாது'என்று குசும்புடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் மன்சூர் அலி கான்.

Actor mansoor ali khan Corona video

மேலும், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடுதோறும் குவார்ட்டர் மதுபானம் வழங்க வேண்டும் என்று பேசி இருந்தார். மேலும், தொட்டாலே ஒட்டிக்கும்னா பணத்தின் மூலம் கொரோனா பரவாதா என்றும் கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X