அரபிக்குத்து பாட்டுக்கு வில்லன் நடிகரோட டான்ச பாருங்க... இப்படியும் ஆடலாமா?
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது பீஸ்ட் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடல் வெளியானது.
இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், பிரபலங்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பீஸ்ட் படம். மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் ரிலீஸ்
வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு மற்றும் கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே படத்தின் முதல் பாடல் கடந்த மாதம் 14ம் தேதி காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியானது. அனிருத் இசையில் இந்தப் பாடல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

அனைவரையும் கவர்ந்த பாடல்
முன்னதாக வெளியான பாடலுக்கான பிரமோவும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபலங்கள் அனைவரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் இந்தப் பாடல் கவர்ந்துள்ளது.

மன்சூர் அலிகான் ஆட்டம்
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் லிரிக் வீடியோவாக வெளியான இந்தப் பாடல் 12 நாட்களிலேயே 100 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஆடியுள்ள நடன வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

வாக்கிங்கின்போது டான்ஸ்
மெரினாவில் வாக்கிங் போன அவர், அவரது ஸ்டைலில் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அவர் நடனமாடுகிறாரா அல்லது சண்டையிடுகிறாரா என பார்ப்பவர்களுக்கு சந்தேகம் எழுவதை தடுக்க முடியவில்லை. மெரினாவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இவரது நடனத்தில் இணைந்துள்ளனர்.
Recommended Video

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படத்தின் முதல் பாடல் மிகவும் சிறப்பான வகையில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் விரைவில் அடுத்த பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படத்தை ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











