பகாசுரன் படத்துக்காக குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்.. ரிகர்சல்லயே இவ்வளவு எனர்ஜியா?

சென்னை : நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பகாசுரன்.

வழக்கம் போல வட மாவட்ட மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மோகன் ஜி.

இந்தப் படத்தில் இயக்குநர் நட்டி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

நடிகரும் பிரபல இயக்குநருமான செல்வராகவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாணிக்காயிதம் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. தன்னுடைய உடன்பிறவாத சகோதரிக்கு நேரும் இழிவுக்காக அதற்கு காரணமானவர்களை அழிக்க துணை நிற்கும் கேரக்டரில் இவரது நடிப்பு மிரட்டியது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் டீசர், போஸ்டர்கள், ப்ரமோக்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பகாசுரன் படத்தில் செல்வராகவன்

பகாசுரன் படத்தில் செல்வராகவன்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மோகன் ஜி இயக்கத்தில் பகாசுரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தில் நட்டி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். உடன் மன்சூர் அலிகான், ராதாரவி, கே ராஜன், தேவதர்ஷினி, கூல் சுரேஷ் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நவம்பர் ரிலீஸ்

நவம்பர் ரிலீஸ்

இந்தப் படம் நவம்பரையொட்டி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கான ஒத்திகையில் மன்சூர் அலிகான் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

மன்சூர் அலிகான் குத்தாட்டம்

மன்சூர் அலிகான் குத்தாட்டம்

மன்சூர் அலிகான் எப்போதுமே குத்தாட்டத்தில் மிகவும் சிறப்பாக ஆட்டம் போடுவார். இது அவரது கேப்டன் பிரபாகரன் படத்திலிருந்தே ரசிகர்கள் பார்த்து வருவதுதான். சமீபத்தில் இவர் நடனமாடிய பாடல் ஒன்றை லோகேஷ் தனது விக்ரம் படத்தில் பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் அதேபோன்ற நடன அசைவுகளுடன் பகாசுரன் படத்தில் நடமாடியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X