த்ரிஷாவை நான் தப்பா பேசல.. எவனோ கொம்பு சீவிவிட்டு இருக்கான்.. மன்சூர் அலிகான் விளக்கம்!
சென்னை: மன்சூர் அலிகானின் ஆபாசமான பேச்சுக்கு திரிஷா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், மன்சூர் அலிகான் தான் அப்படி பேசவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு, வசூலில் நன்றாக கல்லாக்கட்டியது.

இந்தப்படத்தில், விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான்,மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர்.
லியோ: இந்தப் படத்தில் லியோ தாஸின் வாழ்க்கை குறித்து பிளாஷ் பேக் சொல்லும் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இந்த பிளாஷ் பேக் சீன் தான் படத்திற்கு மிகவும் முக்கியமான காட்சியாக இருந்தது. இந்நிலையில், மன்சூர் அலிகான் லியோ படத்தில் நடித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
பெட் ரூம் காட்சி மிஸ்: அதில், இப்போது எல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்கிறோம் நிச்சயம் பெட் ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், த்ரிஷாவை கண்ணில் காட்டாமல், அனுமார் சஞ்சீவி மலை கொண்டுபோனது போல், அவர்களின் கால் தரையில் படாமல் காஷ்மீர் கொண்டு போனார்கள் என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கடுப்பான த்ரிஷா: மன்சூர் அலிகானின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த த்ரிஷா, மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருப்பாக பேசிய வீடியோ ஒன்றை நான் பார்த்தேன். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், அவமரியாதையாகவும், வெறுக்கத்தக்க வகையிலும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசி உள்ளார்.
அவருடன் நடிக்க மாட்டேன்: அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம். ஆனால், இதுவரை இது போன்றதொரு நபருடன் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு ஆறுதல் இனி வரும் நாட்களிலும் எனது திரை வாழ்க்கையில் நான் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
எவனோ கொம்பு சீவிவிட்டு இருக்கான்: இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான், அய்யா பெரியோர்களே, திடீர்னு நான் த்ரிஷாவை தப்பா பேசிவிட்டேன் என்று, என் பொண்ணு, பசங்க வந்த செய்தியை அனுப்பிசாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல பிரபல கட்சியில் போட்டியிடுறேனு சொன்ன வேளையில் வேண்டுமனே எவனோ கொம்பு சீவிவிட்டு இருக்கானுங்க.

சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்: உண்மையில் அந்த பெண்ணை உயர்வாத்தான் சொல்லி இருப்பேன், அனுமார் சஞ்சீவி மலையை கையில் தாங்கிக் கொண்டு போன மாதிரி,வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. அந்த ஆதங்கத்த காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா.
பொழப்ப பாருங்கப்பா: நான் இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். நான் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கிறவன் என்பது அனைவருக்கும் தெரியும், சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. வீடியோவை தப்பா கட் பண்ணி காமிச்சு அவங்களை கோவப்பட வெச்சிட்டாங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு.. பொழப்ப பாருங்கப்பா என மன்சூர் அலிகான் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











