Mansoor Ali Khan - நடிகையுடன் படுக்கை காட்சி.. நிறைய டேக் வந்தா ஜாலிதான்.. மன்சூர் அலிகான்

சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) நடிகைகளுடனான படுக்கை காட்சியில் நிறைய டேக்குகள் வந்தால் ஜாலியாக இருக்கும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

 Actor Mansoor Ali Khan has said that it will be fun if there are many takes in the bed scenes with the actresses

அரசியலில் மன்சூர் அலிகான்: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென அரசியலிலும் குதித்தார் அவர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். காலப்போக்கில் அந்தக் கட்சியும் காணாமல்போனது.

வைரல் மன்சூர்: நடிப்பு, அரசியலைத் தாண்டி தன்னுடைய செயல்பாடுகளால் அவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடியவர். அவர் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் பலருக்கு சிரிப்பு வரும்படி அமைந்தது. அப்படிப்பட்ட வீடியோக்களை நெட்டிசன்கள் அதிகம் பார்த்தும், பகிர்ந்தும்வந்தனர்.,

லியோவில் மன்சூர்: லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர். கைதி கதையையும் அவரை மனதில் வைத்துதான் எழுதினார். ஆனால் ஏதோ காரணத்தால் மன்சூரால் நடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகளுடன் படுக்கை காட்சியில் நிறைய டேக்குகள் வந்தால் ஜாலியாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

மன்சூர் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பல நடிகைகளுடன் மோசமான படுக்கை காட்சிகளில் நடித்திருக்கிறேன். குறிப்பாக ரம்யாகிருஷ்ணனுடன் நடித்தது அருமையாக இருந்தது. அதேபோல் விஜய் படம் ஒன்றில் நடிகை ஸ்வாதியை தூக்கி மெத்தையில் பொத்துனு போடுவது மாதிரி நடித்திருக்கிறேன். அப்போது நிறைய ரீ டேக்ஸ்லாம் எடுப்பார்கள். அப்போதெல்லாம் ஜாலி பண்ணிடுவேன்" என பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X