என்னைவிட விஜய்க்கு சம்பளம் குறைவுதான்.. சம்பவத்தை பகிர்ந்த மன்சூர் அலிகான்

சென்னை: Vijay Salary (விஜய் சம்பளம்) தன்னைவிட விஜய்க்கு சம்பளம் குறைவுதான் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். இளைய தளபதியாக இண்டஸ்ட்ரிக்குள் வந்து தற்போது தளபதியாக உயர்ந்து நிற்கிறார். அவர் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் படம் இணைந்துவிட்டதாக பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல பெயர் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் விஜய்.

Actor Mansoor Ali Khan has said that Vijays salary is less than him

லியோ: இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்னர் நடித்த இரண்டு படங்களில் விட்டதை லோகேஷின் துணையோடு மீட்டெடுக்க முழு ஃபோர்ஸில் களமிறங்கியிருக்கிறார் தளபதி.

தளபதி 68: லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்புக்கு பிறகு அதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு லியோ ரிலீஸுக்கு பிறகுதான் படம் குறித்த் அப்டேட்டுகள் வெளியாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

175 கோடி ரூபாய் சம்பளம்?: லியோ படத்துக்காக விஜய்க்கு 135 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸோ 450 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக குரல்கள் கேட்கின்றன. சூழல் இப்படி இருக்க அவரது 68ஆவது படத்துக்கான சம்பள பேச்சுவார்த்தையை 175 கோடி ரூபாயிலிருந்துதான் ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கியதாகவும்; நிச்சயம் 175 கோடி ரூபாய் சம்பளம் விஜய் பெறுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. அது உண்மையாகும்பட்சத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற பெயரை விஜய் பெறுவார்.

மன்சூர் அலிகானைவிட சம்பளம் குறைவு: இந்நிலையில் மன்சூர் அலிகானை விடவும் விஜய் குறைவான சம்பளம் வாங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது கடந்த 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் வசந்தவாசல். இதில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் மன்சூர் அலிகானுக்கு நான்கு லட்சம் ரூபாய் சம்பளமாம். அதேசமயம் விஜய்க்கோ இரண்டு லட்சம் ரூபாய்தான் சம்பளமாம். இந்தத் தகவலை மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

விஜய்யுடன் அவர் தற்போது லியோ படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக செந்தூரப் பாண்டி, தேவா, மின்சார கண்ணா ஆகிய படங்களில் விஜய்யுடன் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X