வெறித்தனமான வொர்க் அவுட்.. எந்த படத்திற்காக மன்சூர் அலிகான் இப்படி ரெடியாகுறாருனு தெரியுமா?

சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் புதிய படத்திற்காக வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

விஜய் காந்துடன் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். தமிழ்,தெலுங்கு, கன்னடம் அனைத்து மொழிகளிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

வில்லனாக படங்களில் நடித்து வந்த மன்சூர்அலி கான் குணசித்திர நடிகராகவும், காமெடியனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். பார்த்தாலே மிரண்டுபோகும் அளவுக்கு பயங்கர வில்லாக நடித்த மன்சூர் அலிகான், கந்தசாமி, குலேபகாவலி, சரவணன் இருக்க பயமேன்,ஜாக்பாட், தில்லாலங்கடி ஆகிய படத்தில் காமெடியில் சும்மா பின்னி இருப்பார்.

சூப்பரான டான்ஸர்

சூப்பரான டான்ஸர்

நடிப்புக்காக எவ்வளவு ரசிகர்களைப் பெற்றிருக்கிறாரோ, அதே அளவு தனது நடனத்துக்காகவும் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் மன்சூர் அலிகான். ஆட்டமா தேரோட்டமா, சக்கு சக்கு வத்திக்குச்சி, காபி தண்ணி போடட்டுமா என அவர் நடனமாடிய பாடல்களை பட்டியலிடலாம். சமீபத்தில் விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் ஹிட்டானதை அடுத்து, அந்த பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி இன்ஸ்டகிராமில் வெளியிட்டு வருகிறார்.

வெறித்தனம் வெறித்தனம்

வெறித்தனம் வெறித்தனம்

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், தளபதி 67 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் மன்சூர் அலி கான் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வருகிறார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வெறித்தனம் வெறித்தனம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

தளபதி 67 படத்தில்

தளபதி 67 படத்தில்

தளபதி 67 படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், கவுதம் மேனன், விஷால், மிஷ்கின், நிவின் பாலி, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு படம் வெளியான உடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X