எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய தேவையில்லை..நான் தான் ஜெயிப்பேன்.. மன்சூர் அலிகான்!

சென்னை: எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை, வேலூரில் நான் தான் ஜெயிப்பேன். பிரிச்சு மெய்ந்து எல்லா வாக்குக்களையும் வாக்குவதற்குத்தான் இங்கே வந்து இருக்கிறேன் என்று இந்திய ஜனநாயக புலிகள் கழகத்தின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மீன் மார்க்கெட்டுக்கு மீன்களை வாங்க வந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Actor Mansoor Ali Khan Lok Sabha Election Campaign in vellore

மன்சூர் அலிகான்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய அவசியம் இல்லை. நான்தான் இங்கு வெற்றி பெறப்போகிறேன். பல அமைப்புகள் மற்றும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கேட்டு கொண்டதற்கு இணங்க இங்கு போட்டியிடுகிறேன். பிரிச்சு மெய்ந்து அனைவருடைய வாக்குக்களையும் பெறத்தான் இங்கே வந்து இருக்கிறேன். சிலர் வெற்றி பெறுவதற்காக எது வேண்டுமானாலும் செய்து குழப்பி விடுவார்கள்.

நாடக தேர்தல்: திமுக, காங்கிரஸ், அதிமுக என மாறி மாறி நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டனர். ஆனால் மக்கள் பிச்சைகாரர்களாகவே இருக்கின்றனர். மோடி நடத்துவது நாடக தேர்தலாக இருக்கிறது. மோடி எல்லாத்தையும் முன்னாடியே முடிவி செய்துவிட்டுதான் தேர்தலை நடத்துகிறார். இதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். மேலும், ஆளுநரும் தேவையில்லை, ஆளுநர் பதவியும் தேவையில்லாத ஒன்று.

போராடுவேன்: ஓட்டு மெஷினை எதிர்த்து யாரும் பேசவில்லை, அது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் தனி ஒரு ஆளாக நாடாளுமன்றம் சென்று, வாக்கு சீட்டு மூலம் தேர்தலை நடத்தச் சொல்லுவேன். ஓட்டு மெஷினை தூக்க சொல்லி போராட்டம் செய்வேன். இவர்கள் யாரும் போராட்டம் செய்யவில்லை.அது ஏன் என்று தெரியவில்லை. இது போலி ஒரு ஜனநாயகம், ஏமாற்று வேலை என்றார்.

மிகப்பெரிய பிரளயம்: ஏ டூ இசட் எல்லாமே நான் தான், இன்னும் எனக்கு சின்னம் கொடுக்கவில்லை இனி மேல் சின்னத்தை பெற்று, மக்களிடம் சின்னத்தைக் கொண்டுசென்று பெரிய அளவில் பிரளம், மிகப்பெரிய போராட்டம், மிகப்பெரிய பணி எனக்கு இருக்கு. இந்த தொகுதியில் நான் வெற்றி பெற வேண்டும், சுற்றி உள்ள மலைகளை பசுமையாக்க வேண்டும், ஏரிகளை ஆங்காங்கே அமைக்க வேண்டும் நிச்சயம் அதை செய்வேன். இன்றைக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன். திமுக அண்ணா சின்னத்தை வைத்து ஏமாற்றி, குடும்பத்தை வளர்க்கின்றனர். இப்படி இருக்கும்போது தனி ஒருவனாக போராடுகிறேன். ஏ டீமா பீ டீமா என்பது பின்னர் தெரியும் என்று மன்சூர் அலிகான் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X