அட அப்படி இல்லப்பா.. இப்படி ஆடு.. டான்ஸ் சொல்லி தரும் மன்சூர் அலிகான்!

சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் டான்ஸ் ஆட சொல்லித்தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான வில்லனாக கலக்கியவர். பெரும்பாலும் இவர் வில்லனாகத்தான் நடித்து இருக்கிறார்.

இவருடைய வில்லத்தனத்தை பார்த்து பயப்படாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு படங்களில் மன்சூர் அலிகான் மிரட்டியிருப்பார்.

நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் எது என்றால் அது கேப்டன் பிரபாகரன் தான். அந்த படத்தில் மன்சூர் அலிகானின் நடிப்பை பார்த்த பலர் ஆத்தாடி இந்த மனுஷன் என்னய்யா இப்படி பண்றாரு என கேட்டனர். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லனாக கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார் மன்சூர் அலிகான்.

ஆத்தாடி யாருப்பா இவரு

ஆத்தாடி யாருப்பா இவரு

ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். வில்லனாக நடுங்கவைத்த மன்சூர் அலிகான் சரவணன் இருக்க பயமே, குலேபகாவலி, என்ஜிகே, ஜாக்பாட் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அட இவரு என்னய்யா எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னுறாருனு ரசிகர்கள் அவரை பாராட்டினார்கள்.

“சக்கு சக்கு வத்திக்குச்சி“

“சக்கு சக்கு வத்திக்குச்சி“

நடிப்பு மட்டுமல்ல டான்சும் சூப்பரா வரும் என்பதை நிரூபித்து வருகிறார் மன்சூர் அலிகான். சமீபத்தில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் சண்டை காட்சியில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 1995ம் ஆண்டு வெளியான அசுரன் பட பாடலை தூசு தட்டி எடுத்து விக்ரம் படத்தில் நுழைந்து தெறிக்கவிட்டிருந்தார் லோகேஷ். இப்படி பழைய பாட்டை படங்களில் பயன்படுத்துவது லோகேஷ் கனகராஜின் தனி ஸ்டைல்.

அட அப்படி இல்லப்பா

சக்கு சக்கு பாட்டிற்கு கலக்கலாக ஆட்டம்போட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்த மன்சூர் அலிகான். டான்ஸ் மாஸ்டர்களுக்கே சவால் விடும் வகையில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அட அப்படி இல்லப்பா இப்படி ஆடு என்று தனது குழுவுக்கு சொல்லி கொடுத்தது மட்டும் இல்லாமல், ஒரு பெண் டான்சரை முதுகிலும் இடுப்பிலும் வைத்து வளைத்து வளைத்து ஆடிஉள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X