குஷ்புவிடம் அத்துமீறினாரா விஷால்? சுந்தர்.சிக்கு கஷ்டமா இருக்காதா? மன்சூர் அலிகான் பேச்சே சரியில்லை!
சென்னை: நடிகர் விஷால், சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் மத கஜ ராஜா. இந்தப் படத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். படம் நாளை அதாவது ஜனவரி 12ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டே இந்த படம் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்டு, அதன் பின்னர் ரிலீஸ் ஆகவில்லை. இப்படியான நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். கடுமையான உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் விஷால் குறித்தும் குஷ்பு குறித்தும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மத கஜ ராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு கடுமையாக கைகள் நடுங்கியது. மேலும் பார்ப்பதற்கே அவர் இயல்பாக இல்லை என்பதை புரியவைத்தது. கடும் உடல்நலக் கோளாறுடன் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவரால், மைக்கப் பிடித்துக் கூட சரியாக பேச முடியவில்லை. மேலும், தனது கண்ணாடியைக் கூட அவரால் முறையாக கழட்டி மாட்ட முடியவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பலருக்கும் கேள்வி எழுந்தது.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் விஷாலுக்கு கடுமையான காய்ச்சல் என மருத்துவ அறிக்கை வெளியானாலும், அவரது இந்த நிலைக்கு காரணம் தகாத பழக்கங்கள் என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் நடிகர் விச்சு விஸ்வநாதன் பேசுகையில், விஷாலின் உடல்நிலையில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர் ராஜா கூறும்போது, விஷாலின் நிலைமைக்கு நடிகர்களான ரமணா மற்றும் நந்தா தான் முக்கிய காரணம் என குண்டைத் தூக்கிப்போட்டார்.
விஷால்: பத்திரிகையாளர் பிஸ்மி குறிப்பிடும்போது, நடிகை குஷ்புவும் சுந்தர் சி-யும் நினைத்திருந்தால், விஷாலுக்கு இப்படியொரு பிரச்னை உள்ளது என்பதை வெளியே தெரியாமல் மறைத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதுபோல எதுவும் செய்யாமல், ஊடகங்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி, விஷாலின் பெயருக்கு கலங்கம் விலைவித்துவிட்டார்கள் எனத் தெரிவித்தார்.
மன்சூர் அலிகான் : இப்படியான நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் விஷால் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு, நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும். குஷ்புவைப் பார்த்ததுமே கட்டிப்பிடித்து முத்தங்களை வாரி வழங்குகின்றார். குஷ்பு இன்னொருவர் மனைவி, விஷால் சமூகத்தில் ஒரு பதவியில் இருப்பவர். பொது வெளியில் இப்படி நடக்கக்கூடாது இல்லையா? படத்தில் நடிப்பது வேறு, ஆனால் பொது வெளியில் அது அநாகரீகம். குஷ்புவின் கணவர் சுந்தர் சி பாவமில்லையா?
குஷ்பு: விஷால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது. குஷ்பு தான் கண்ணகியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவெளியில் ஒரு கண்ணகியை கோவலன் அல்லாத ஒருவன் கட்டிப்பிடித்து பசக் பசக் என முத்தம் கொடுக்கின்றார். எனக்கே ஒரு நடிகராக அசிங்கமாக உள்ளது. விஷால் உடல்நிலை தேறிவிடுவார். சின்ன வயதுதானே, இப்போதே இந்த நடுங்கு நடிங்கினால், கல்யாணத்துல என்ன நடுங்கு நடுங்குவாரோ? எனவே விஷால் தன்னை திருத்திக் கொள்வார்” என மன்சூர் அலிகான் பதில் அளித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











