பல வருஷமா இதே அவமானம்.. பழிவாங்குகிறார்கள்.. மகனை நினைத்து கண்கலங்கிய மன்சூர் அலிகான்!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். அதன்பின் குணசித்திர கதாபாத்திரம், காமெடி என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த ஆண்டு போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜனவரி மாதம், சென்னை உயர்நீதிமன்றம் அலிகான் துக்ளக்குக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும், சென்னையில் 35 லட்சம் ரூபாய் கடன் தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவரை மிரட்டியதாக மன்சூர் அலிகானின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், மண்ணடியில் ஒருவரிடம் என்னுடைய மனைவியின் நிலத்தை வைத்து 35 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் பணத்தை தரவே இல்லை இது தொடர்பாக காவல் நிலையத்தில் 5 வருடத்திற்கு முன்பே புகார் அளித்தேன். இதுவரைக்கும் அந்த நபர் மீது எஃப்.ஐ.ஆர் கூட போடவே இல்லை. இதனால், சரி நீதிமன்றத்திற்கு சென்று பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று முடிவு செய்தேன். அதற்கும் காவல்துறையினர் எனக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை.

நடிகர் மன்சூர் அலிகான்: இப்பொழுது என்னுடைய இரண்டு மகள்களுக்கும், என்னுடைய மகனுக்கும் திருமண வயது வந்து விட்டதால் பணத் தேவை உள்ளது. அப்பா கஷ்டப்படுகிறாரே என நினைத்து, நான் அவரிடம் பேசி பணத்தை வாங்கி வருகிறேன் என்று, என் மகன் அவரின் வீட்டிற்கு சென்றார். அப்போதும், தெருவில் இருந்து தான் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறான். அந்த நபர், உடனே 100க்கு ஃபோன் செய்து போலீசை வர வைத்துவிட்டார்கள். அந்த காவலரும் என் மகன் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு விட்டார்கள். உடனே பத்திரிக்கையில் மன்சூர் அலி கானின் மகன் கைது என்று செய்தி போட்டு விட்டார்கள். 35 வருடமாகவே மன்சூர் அலிகான் மீது காழ்புணர்ச்சி உடன் தான், அந்த பத்திரிக்கையை நடந்து கொள்கிறது.
என்ன நியாயம்: தற்போது நான் ஒரு ஆல்பம் ஒன்றை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அது விரைவில் வெளிவர இருக்கிறது. எப்போதெல்லாம் நான் அடுத்த அடி எடுத்து வைக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை அவமானப் படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். காவல்துறையினர் என்னை விஜய், சூர்யா, அஜித் போல அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது எல்லாம் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வில்லன்கள் தான் தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல், போலீஸ் புகழ் அடைய வேண்டும் என்பதற்காக,என் மகன் மீது FIR போட்டு ஊடகத்திற்கு செய்தி கொடுத்தால் என்ன அர்த்தம்.
பணம் வாங்கி நபர் அந்த பணத்தை தராமல், வேறு ஒருவருக்கு பணத்தை கொடுத்து சம்பாதிக்கிறான். அந்த ஆளு மேல நடவடிக்கை எடுக்காமல், பணம் கேட்க போனவர்களிடம் இப்படி நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம், அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











