முடிச்சவிக்கி, மொள்ளமாரி கால்ல விழாதீங்க.. ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா மன்சூர் அலிகான்!
சென்னை: முடிச்சவிக்கி, மொள்ளமாரி கால்ல விழாதீங்க என்று கிக் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசி உள்ளார்.
நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கிக். சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார்.

இதில் செந்தில், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், முத்துக்காளை, கிங் காங், கூல் சுரேஷ், ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
கிக் செய்தியாளர்கள் சந்திப்பு: கிக் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான், கன்னடத்தில் பல திரைப்பட்ங்களை இயக்கி இருக்கிறார். தற்போது, இவர் தமிழில் படத்தை இயக்குவதைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படம் நன்றாக வந்து இருக்கிறது. அனைவரும் தியேட்டருக்கு போய் இந்த படத்தைப் பாருங்க என்றார்.
மன்சூர் அலி கான்: மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு வர முக்கிய காரணமே சந்தானம் தான். அவர் சரவெடிப்போல எதாவது பேசுவார் என்பதற்காகத்தான் வந்தேன். சந்தானத்திற்கு நாளுக்கு நாள் பொறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், கடுமையாக உழைத்து நல்ல படத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். சந்தானம் படத்தில் நூறு சதவீதம் எண்டர்டெயின்மென்ட் இருக்கும் என்றார்.
இனிமேல் காலில் விழுந்தா அடி விழும்: தொடர்ந்து பேசிய மன்சூர் அலி கான், முடிச்சவிக்கி, மொள்ளமாரி, மோசமானவன் கால்ல விழுந்தா நம்ம மானம், மரியாதை என்னாகும், இனிமேல் எவன் காலில் விழுந்தாலும் உதை விழும் என்று பேசினார். இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மன்சூர் அலிகான் ரஜினி, உத்திரபிரதேச முதல்வர் காலில் விழுந்ததை மறைமுகமாக தாக்கி பேசினார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











