அட நம்ம மன்சூர் அலிகானா இது.. புது போட்டோஷுட்டில் சும்மா கலக்குறாரே !
சென்னை : அனைவருக்கும் வில்லன் நடிகராக பரிச்சயமான நடிகர் மன்சூர் அலிகான் இப்பொழுது கலக்கலான போட்டோஷூட் செய்து செம்ம வைரலாகி வருகிறார்.
கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் மிரட்டிய இவர் சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் காமெடியிலும் கலக்கி வருகிறார்.
மனோபாலா, சென்ட்ராயன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சரவணன் உள்ளிட்ட பல நடிகர்களும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் புது போட்டோ ஷூட் எடுத்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது மன்சூர் அலிகான் வேற லெவலில் செம மாஸான போட்டோ ஷூட் எடுத்து அந்தப் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வில்லன் கதாபாத்திரம்
தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழியினருக்கும் பரிச்சயமான நடிகர் மன்சூர் அலிகான் தமிழில் வேலை கிடைச்சிருச்சு, தங்கமான தங்கச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் முதலில் நடித்திருந்தாலும், இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கிய "கேப்டன் பிரபாகரன்" திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் இவரை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியது.

மிரட்டல் தோனியில்
நடிகர் விஜயகாந்த் நடித்திருந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க மன்சூர் அலிகான் மிரட்டல் தோனியில் மெயின் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

நிரூபித்துள்ளார்
அலட்டிக்கொள்ளாத டயலாக் டெலிவரி, தனித்துவமான பாடி லாங்குவேஜ் என அனைவரையும் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வந்த மன்சூர் அலிகான் சமீபகாலமாக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தன்னால் காமெடியிலும் கலக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

ஸ்டைலிஷான போட்டோஷூட்
விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், குலேபகாவலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை சிறந்த நகைச்சுவை நடிகராக ரசிகர்களுக்கு காட்டிய நிலையில் இப்பொழுது செம ஸ்டைலிஷான போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பல நடிகர்களும்
லாக்டவுனில் ஹீரோயின்கள் பலரும் போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் அதே சமயம், நடிகர்கள் மனோபாலா, சென்ட்ராயன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சரவணன் உள்ளிட்ட பல நடிகர்களும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் இதுவரை கண்டிராத புது லுக்கில் போட்டோ ஷூட் எடுத்த அந்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்தனர்.
Recommended Video

பார்த்திராத லுக்கில்
இப்போது அந்த வரிசையில் நடிகர் மன்சூர் அலிகானும் இணைந்துள்ளார், டிப்டாப்பான உடை ஸ்டைலிஷான நடை என இதுவரை மன்சூர் அலிகானை எவரும் பார்த்திராத லுக்கில் செம ஸ்டைலிஷாக வெளியாகியிருக்கும் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











