விஜய்யை குழிக்குள் தள்ளி மூடி இருப்பார்கள்.. அயோக்கியத்தனமான அரசியல்.. மன்சூர் அலிகான் ஆதங்கம்!
சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாட்டையை உலுக்கி இருக்கும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், என்னுடைய ஆதரவு விஜய்க்குத்தான் ஆதரவு என கண் கலங்கி பேசினார்.
அதில், கரூரில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யை பார்க்கும் ஆசையுடன் வந்தவர்களை பாழாய் போன, சீக்கு பிடித்த, கரை படிந்த, மோசமான அரசியல்வாதிகளின் சதித்திட்டதால் மரணிக்க செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 40 இதயங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் துயர சம்பவத்தை கேட்டதிலிருந்து எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை. கரூர் எனது சொந்த ஊர், இன்னும் என்னுடைய வீடு கள்ளப்பட்டிகள் தான் உள்ளது. அவர்கள் உயிரிழந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டு, மிதிபட்டு, அடிபட்டு, குழிக்குள் விழுந்து இறந்திருப்பார்கள் என்று நினைக்கும் போதே மனம் வேதனையாக இருக்கிறது. நம்ம நாட்டில் இப்படியும் நடக்கிறதா? என நினைக்கும் போது அவமானமாக இருக்கிறது.

நடிகர் மன்சூர் அலிகான்: விஜய்யின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால், அவரை கொள்கை ரீதியாக எதிர்க்கலாம் கூட்டம் போட்டு அவருக்கு பேச தெரியவில்லை என சொல்லலாம். இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்து இருக்கிறது. அதிலும் கேட்ட இடம் கொடுக்கவில்லை என தம்பி விஜய் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது, தற்போது நடந்து இருக்கும் இந்த சம்பவம் அயோக்கியத்தனமான அரசியல் தானே, சொந்த மக்களை... சொந்த ஊர் காரன்.. மக்களை காவு கொடுத்து விட்டு இப்படி நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதில், மக்கள் யார் வரவேண்டும் என்பதை சொல்வார்கள். சில அரசியல்வாதிகள் கோமாளித்தனமாக நடந்து கொண்டார்கள் நம்மையும் கோமாளியாக்கினார்கள். சிலர் முடியாமல் கோமாளியாக இருப்பதே நல்லது என ஒதுங்கி விட்டார்கள். பல ஜாம்பவான்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள், பெரிய திமிங்கலமாக, முதலையாக, அடக்க ஆள் இல்லை என்பது போல சென்று கொண்டு இருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு இந்த பருப்பு வேகாது. இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் இதற்கான தீர்ப்பை தருவார்கள்.
விஜய்யை குழிக்குள் தள்ளி இருப்பார்கள்: விஜய் மாநாடு நடத்துவதற்கு 28 கண்டிஷன்களை போட்டார்கள் எந்த கட்சிக்காவது இப்படி கண்டிஷன்களை போட்டார்களா? மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும் என தெரிந்தும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் கொடுத்து இருக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல், முட்டு சந்தில் பிரச்சாரம் நடத்துவதற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? கொஞ்சம் விட்டு இருந்தால் விஜய் தம்பியை குழிக்குள் போட்டு மூடி ஜன கன மன பாடி இருப்பார்கள்? இது அரசியலா.. கேவலமாக இல்லை.. அயோக்கியத்தனமான அரசியலை செய்து கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய முழு ஆதரவு விஜய்க்கு தான் என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











