மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை.. மனசு கஷ்டமா இருக்கு.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!
சென்னை: மன்சூர் அலிகான் யார் மனதையும் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடியவர் இல்லை என்று சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார்
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சியே வைப்பது இல்லை. நானும் லியோ படத்தில் பலாத்கார காட்சி இருக்கும், திரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என்றெல்லாம் நினைத்தேன்.

ஆனால், அந்த படத்தில் திரிஷாயை கண்ணுலேயே காட்டவில்லை என்று பேசி இருந்தார். இவரின் இந்தமோசமான பேச்சு இணையத்தில் புயலை கிளப்பியது.
மன்சூர் அலிகான்: இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திரிஷா,என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் சேர்த்து நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பலரும் தங்கள் கண்டனத்தை கூறி வருகின்றனர்.
நான் மன்னிப்பு கேட்குற ஜாதி இல்லை: மன்சூர் அலிகானின் பேச்சை வன்மையாக கண்டித்த நடிகர் சங்கம், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து,நேற்று பேட்டி அளித்த மன்சூர் அலிகான், நான் மன்னிப்பு கேட்குற ஜாதி இல்லை, என்னிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நடிகர் சங்கம் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு இமாலய தவறு செய்துவிட்டது என்றார்.
யார் மனதையும் காயப்படுத்த மாட்டார்: நாளுக்கு நாள் இந்த விவகாரம் பூதாகரமாக வரும் நிலையில், சீமான் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், மன்சூர் அலிகான், இன உணர்வு மிக்க ஒரு தமிழன், இவரை பற்றி வரும் செய்தியை பார்க்கும் போது மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. எனக்கு தெரிந்து அவர் யார் மனதையும் காயப்படுத்தக்கூடியவர் இல்லை. அவர் வேடிக்கையாக பேசக்கூடியவர் என்பதால், அப்படி பேசி இருப்பார். இருந்தாலும், இந்த விஷயத்தை இப்படி பெரிய விஷயமாக்க வேண்டுமா என்று எனக்குத் தோன்றுகிறது.
தேவையில்லாத ஒன்று: அதே போல, மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த போது இந்த மகளிர் ஆணையம் என்ன செய்தது, 8 வயது ஆசிபா அடித்து வன்கொடுமை செய்யப்பட்டபோது இந்த மகளிர் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது என்று சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











