சக்கு, சக்கு வத்திகுச்சி.. சரவெடி ஆட்டம் போடும் மன்சூர் அலிகான்.. அட.. அதே எனர்ஜி அப்படியே இருக்கே!

சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் சிறப்பான வில்லனாக நடித்து வருகிறார்.

இவரது தனிப்பட்ட மற்றும் அலட்சியமான நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இவரது நடிப்பில் பல படங்கள் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் காணப்படுகின்றன.

சிறப்பான வில்லன் நடிகர்

சிறப்பான வில்லன் நடிகர்

தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பட்டையை கிளப்பி பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் மன்சூர் அலிகான். தமிழில் இவர் நடிப்பில் விஜயகாந்துடன் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் ரசிகர்களின் எவர்கிரீன் படங்களின் வரிசையில் ஒன்றாக அமைந்துள்ளது.

தெனாவட்டான நடிப்பு

தெனாவட்டான நடிப்பு

தெனாவட்டான மற்றும் அழுத்தமான நடிப்பிற்கு சொந்தக்காரர் மன்சூர் அலிகான். கடந்த 1990 முதல் இவர் நடித்து வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் இவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் பல படங்கள் தற்போது வரை ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் மன்சூர் அலிகானின் சக்கு சக்கு பாடல் இடம்பெற்றிருந்தது.

லோகேஷிற்கு பிடித்த நடிகர்

லோகேஷிற்கு பிடித்த நடிகர்

இந்தப் பாடல் குறித்து படத்தின் பிரமோஷனின்போது பேசிய லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் எனர்ஜி குறித்து பாராட்டியிருந்தார். அவரது இந்த எனர்ஜி மற்றும் வித்தியாசமான உடல்மொழிக்கு தான் ரசிகன் என்றும் தெரிவித்திருந்தார். இதனால்தான் அந்தப் பாடலை தன்னுடைய படத்தில் பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

பாடலின் எனர்ஜி

பாடலின் எனர்ஜி

இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாடல் மற்றும் அதன் எனர்ஜி அனைவரையும் கவர்ந்துள்ளது மிகவும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு தற்போது மன்சூர் அலிகான் மீண்டும் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசுரன் படப்பாடல்

அசுரன் படப்பாடல்

கடந்த 1995ல் வெளியான அசுரன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. மிகவும் சிறப்பாக அனாவசியமாக இந்தப் பாடலில் ஆட்டம் போட்டிருப்பார் மன்சூர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவிலும் அதே எனர்ஜியுடன் அவர் ஆடியுள்ளார்.

ஹாரீஸ் ஜெயராஜ் பாராட்டு

ஹாரீஸ் ஜெயராஜ் பாராட்டு

விக்ரம் படத்தில் இரண்டு இடங்களில் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்த காலகட்டத்தை மன்சூர் அலிகானை நமது கண்முன்னே கொண்டுவரும வகையில் படத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு ஆதித்யன் இசையமைத்திருந்த நிலையில் இந்தப் பாடலுக்க புரோகிராம் செய்த நினைவுகளை சமீபத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X