twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓடிடியும் வேணாம்.. ஒரு புடலங்காயும் வேணாம்.. தியேட்டர தொறங்கடா..மன்சூர் அலிகான் பளீர் பேச்சு !

    |

    சென்னை : கொரானாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு வேலைகளும் கணிசமான முறையில் தகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    எனினும் பொழுதுபோக்கில் மிகப்பெரிய முக்கிய பங்கு வகிக்கும் திரையரங்குகள் இன்றுவரை திறக்கப்படாமல், முறையான அறிவிப்புக்காக திரையரங்க உரிமையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
    திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ள நிலையில் திரைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஓடிடி தளங்களில் வெளியாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

    அப்பாவுக்கு பர்த்டே.. வனிதா விஜயகுமார் வாழ்த்து.. குழந்தையில எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க!அப்பாவுக்கு பர்த்டே.. வனிதா விஜயகுமார் வாழ்த்து.. குழந்தையில எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க!

    காமெடி கதாபாத்திரங்களில்

    காமெடி கதாபாத்திரங்களில்

    சினிமாவில் வில்லன் நடிகராக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான், நானும் ரவுடிதான் உள்ளிட்ட சமீபத்திய சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

    இரண்டு முக்கிய கோரிக்கைகளை

    இரண்டு முக்கிய கோரிக்கைகளை

    அவ்வப்போது சமூகத்திற்காகவும் திரைத்துறையில் நடக்கும் ஒழுங்கற்ற செயல்களுக்கும் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து வரும் நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனோபாவம் கொண்ட இவர் இந்த லாக்டவுனில் அரசுக்கு இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்

    பொழுதுபோக்கிற்கு முக்கியமான

    பொழுதுபோக்கிற்கு முக்கியமான

    அதில் முதலாவது கோரிக்கையாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருப்பதாவது, டாஸ்மாக் கடைகளை எல்லாம் திறந்து விட்டு விட்டீர்கள் தியேட்டர்களை எல்லாம் ஏன் இன்னும் திறக்க மாட்டிங்கிறீங்க. திரையரங்குகளை திறந்து விடுங்கள் மக்கள் பொழுதுபோக்கிற்கு முக்கியமான அங்கமாக இது இருக்கிறது.

    டாஸ்மார்க் எல்லாத்தையும் மூடுங்க

    டாஸ்மார்க் எல்லாத்தையும் மூடுங்க

    உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருக்கிறது எல்லோரும் தற்கொலை செய்து செத்துகிட்டு இருக்காங்க. இது ரொம்ப அவசியமான ஒன்று இல்லாட்டி கடுமையான போராட்டம் பண்ண வேண்டியது இருக்கும். ஒன்னு தியேட்டர் எல்லாத்தையும் தொறந்து விடுங்க இல்லனா டாஸ்மார்க் எல்லாத்தையும் மூடுங்க.

    ஓடிடியும் வேணாம் ஒன்னும் வேணாம்

    ஓடிடியும் வேணாம் ஒன்னும் வேணாம்

    இவ்வாறு கூறி மன்சூர் அலிகான் தனது இரண்டாவது கோரிக்கையாக, ஓடிடி நிறுவனம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது வெறும் சூர்யா படம் ஜோதிகா படம் மற்றும் பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஓடிடியில் வெளியாகிறது என்றால் அந்த ஓடிடியும் வேணாம் ஒன்னும் வேணாம்.

    "கடம்பன் பாறை"

    எல்லா படங்களையும் ஓடிடியில போடுங்க, என்னுடைய "கடம்பன் பாறை" எடுத்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகிறது, இதற்கு முன் இந்த படத்தை வெளியிட தியேட்டரும் கிடைக்கவில்லை. ஓடிடியில் என்டர்டைன்மென்ட் திரைப்படங்களை ரிலீஸ் பண்ணுங்க. நீங்க பெரிய நடிகர்கள் படம் மட்டும் தான் போடுறீங்க, இங்க மக்கள் எல்லோரும் என்ன பெரிய ஆள் படம் மட்டும்தான் பார்ப்போம்னு சொல்லிகிட்டு வீட்டில இருக்காங்களா?.

    ஒரு புடலங்காயும் வேணாம்

    ஒரு புடலங்காயும் வேணாம்

    ஒன்னு ஓடிடியில எந்த ஒரு பாகுபாடும் இல்லாம நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடுங்க இல்லையென்றால் ஓடிடியும் வேணாம் ஒரு புடலங்காயும் வேணாம். இண்டஸ்ட்ரில யாருமே குரல் கொடுக்காம உட்கார்ந்துட்டு இருக்கீங்க இது சரியில்ல இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. இவ்வாறு இந்த இரண்டு கோரிக்கைகளையும், வழக்கம்போல தனது ஆதங்கம் கலந்த பாணியில் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

    English summary
    Actor Mansoor Alikhan request to the government About 'OTT'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X