Mansoor Alikhan: சந்திராயன் 3ல் நடக்கும் லியோ பட இசை வெளியீடு.. மன்சூர் அலிகான் நக்கல்!
சென்னை: விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் -லோகேஷ் கூட்டணி இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் விஜய். லியோ மற்றும் பார்த்திபன் என இருவேறு கெட்டப்புகளில் அவர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

சந்திராயன் 3ல் லியோ இசை வெளியீடு நடக்கவுள்ளதாக மன்சூர் அலிகான் நக்கல்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். படத்தில் லியோ மற்றும் பார்த்திபன் என இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் என ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது டீம். மேலும் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிளும், சஞ்சய் தத், அர்ஜூன் பிறந்தநாட்களை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தன. தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்கள் மற்றும் சிங்கிள்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நிகழவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள விஜய், இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அதிகப்படியான பொது நிகழ்ச்சிகளை நடத்திவரும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு எங்கு நடக்கும் என்பதில் பல்வேறு யூகங்கள் காணப்படுகின்றன. நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களும் பட்டியலில் காணப்படுகின்றன. இதனால் ரசிகர்களும் மிகுந்த குழப்பமடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுவதால் மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் லியோ இசை வெளியீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் மன்சூர் அலிகான், தனக்கேயுரிய ஸ்டைலில் சந்திராயன் 3ல் இசை வெளியீடு நடக்கவுள்ளதாக தனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு லியோ ஆடியோ வெளியீடு மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான் நான் லியோ படத்திலேயே நடிக்கலப்பா, ஆளை விடுங்கப்பா என்றும் கடுப்புடன் கூறியுள்ளார். அந்த அளவிற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் லியோ இசை வெளியீடு குறித்த கேள்விகளை தொடர்ந்து அடுக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











