மாட்டுக்கார வேலனாக மாறிய மன்சூர் அலிகான்.. என்னல்லாம் பண்றாரு பாருங்க!
சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமாகி தற்போது கேரக்டர் ரோல்களிலும் கலக்கி வருகிறார்.
மன்சூர் அலிகான் என்றாலே அதிரடி சரவெடி தான் என்று கோலிவுட்டில் ஒரு விமர்சனம் எப்போதும் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவர் பொறுப்பாக மாடுகளை குளிப்பாட்டி தீவனம் வைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் வில்லனாகத்தான் திரையுலகில் அறிமுகமானார். விஜய்காந்துடன் அவர் நடித்திருந்த கேப்டன் பிரபாகரன் கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. அலட்சியமான அவரது உடல்மொழி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. தொடர்ந்து வில்லனாக நடித்து சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார்.

கேரக்டர் ரோல்களில் மன்சூர்
வில்லனாக மட்டுமின்றி சமீப காலங்களில் கேரக்டர் ரோல்களில், காமெடி கதாபாத்திரங்களிலும் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமூக அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பக்ரீத்தையொட்டி அன்னதானம் செய்த வீடியோவும் வெளியானது.

மாடுகளை வளர்த்துவரும் மன்சூர்
மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அந்த மாட்டை அவர் குளிப்பாட்டி தீவனம் வைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மாட்டுடன் பேசிக்கொண்டே அவர் குளிப்பாட்டி விடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

மாட்டிடம் பேசிய மன்சூர்
பாரு நீ குளிக்காம இருந்ததாலே உடம்பெல்லாம் அழுக்கு, வாலெல்லாம் சாணி என்பதாக அந்த மாட்டுடன் அவர் பேசுகிறார். மாட்டின் உடலெங்கும் தனது கையாலேயே தேய்த்து விடுகிறார். தொடர்ந்து மாடு அங்கும் இங்கு போகிறது. ஆனாலும் விடாது கருப்பு என்பதாக அதை சிறப்பாக குளிப்பாட்டி விடுகிறார்.

பாட்டுப் பாடிய மன்சூர்
இதனிடையே மாட்டிடம் குளியல் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா என்றும் பாடல் மூலம் கேள்வி எழுப்புகிறார். வெட்கப்படக் கூடாது என்றும் அறிவுரை வழங்குகிறார். தொடர்ந்து குளிப்பாட்டி முடித்தவுடன் மாட்டிற்கு தீவனம் வைக்கிறார்.

மாட்டிற்கு தீவனம் வைத்த மன்சூர்
அதில் கோதுமை மாவு, அரிசி மாவை கலந்துள்ளதாகவும் அப்பொழுதுதான் கன்றுக் குட்டிகளுக்கு பால் கொடுக்க முடியும் என்றும் மாட்டிடம் கூறுகிறார். சிறந்த நடிகராக உள்ள மன்சூர் அலிகான், ஒரு வேலையாளை வைத்து இந்த வேலைகளை முடித்துக் கொள்ளாமல் தானே களத்தில் இறங்கியது அனைவரையும் கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











