பெண்ணிடம் நம்பர் கொடுத்தாரா மாரிமுத்து?.. அது அவர் அக்கவுண்ட் இல்லைங்க - மகன் அளித்த விளக்கம்
சென்னை: ட்விட்டரில் பெண் ஒருவரிடம் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து நம்பர் கொடுத்தார் என்று சர்ச்சை வெடித்திருக்கும் சூழலில் அதுகுறித்து அவரது மகன் விளக்கமளித்திருக்கிறார்.
இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை,ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை செய்திருக்கிறார் மாரிமுத்து.

வைரமுத்துவிடமும் உதவியாளராக மாரிமுத்து
இயக்குநர்களிடம் மட்டுமின்றி பாடலாசிரியர் வைரமுத்துவிடமும் உதவியாளராக இருந்திருக்கிறார் வைரமுத்து. அடிப்படையில் வாசிப்பு பழக்கமும், எழுதும் பழக்கமும் உடைய மாரிமுத்து வைரமுத்துவிடம் பல காலம் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதும்போது வைரமுத்து கூடவே இருந்தவர் மாரிமுத்து. இதுகுறித்து அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இயக்குநராக மாரிமுத்து
உதவி இயக்குநராக இருந்த மாரிமுத்து ஒருகட்டத்தில் இயக்குநராக மாறினார். அப்படி அவர் எடுத்த படம் கண்ணும் கண்ணும். பிரசன்னா, உதயதாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் வடிவேலுவின் காமெடி எவர்க்ரீனாக அமைந்தது. இதனையடுத்து படங்கள் இயக்காமல் இருந்த மாரிமுத்து விமல் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு புலிவால் படத்தை இயக்கினார். இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நடிகரான மாரிமுத்து
சூழல் இப்படி இருக்க இயக்குந்ர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார் இயக்குநர் ஜி. மாரிமுத்து. முதல் படத்திலேயே அவரது நடிப்பு பலரையும் கவர தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அன்றிலிருந்து இன்றுவரை பிஸியான நடிகராக வலம்வருகிறார் மாரிமுத்து. சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் மாரிமுத்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துவருகிறார். இதிலும் அவரது நடிப்பு பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

சர்ச்சையில் சிக்கிய ஜி.மாரிமுத்து
இந்தச் சூழலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண் Can I Call You என்று பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு மாரிமுத்துவின் புகைப்படம் இருக்கும் அக்கௌண்ட்டிலிருந்து Yes என்று கூறி ஒரு மொபைல் நம்பரும் கமெண்ட் செய்யப்பட்டிருந்தது. கமெண்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நம்பர் மாரிமுத்துவின் நம்பர் ஆகும். இதனையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. மேலும் மாரிமுத்துவை பலரும் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.

மாரிமுத்து மகன் அளித்திருக்கும் விளக்கம்
இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில் மாரிமுத்துவின் மகனான அகிலன் தனது ட்விட்டர் பக்கத்தில், " அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் ஃபோன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











