Ethirneechal - ஏய் இந்தாமா.. எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் உண்மையில் இருக்கிறார்.. மனம் திறந்த மாரிமுத்து
சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் எதிர் நீச்சல் நாடகம் குறித்து ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
வசந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நடிகராக களம் இறங்கினார் மாரிமுத்து. யுத்தம் செய் படத்தின் மூலம் அறிமுகமான மாரிமுத்து பல படங்களில் நடித்திருக்கிறார். அவரது எதார்த்த பேச்சும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது

சின்னத்திரையில் கலக்கும் மாரிமுத்து: பெரிய திரையில் நடித்து மாரிமுத்து புகழ் அடைந்திருக்கிறார். இப்போதுகூட அவர் ரஜினியுட ஜெயிலரில் நடித்திருக்கிறார். இருப்பினும் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் எதிர் நீச்சல் என்ற சீரியல். அதில் அவர் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
ஏய் இந்தாமா?: ஆதி குணசேகரன் கதாபாத்திரம் என்பது உடனுக்குடன் மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது போன்றும், தான் தான் எப்போதும் தலைவன் என்ற மிடுக்கோடும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் அட்டகாசமாக வெளிப்படுத்திவருகிறார். குறிப்பாக அவர் கூறும் ஏய் இந்தாமா வசனம் சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியலாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்து பேட்டி: இந்நிலையில் எதிர் நீச்சல் சீரியல் குறித்தும், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மாரிமுத்து, "சினிமாவுக்குள் வந்து நான் நிறையவே அடி வாங்கியிருக்கிறேன். வறுமை என்னை ரொம்பவே வாட்டிய்ரிஉக்கிறது. மீண்டும் அந்த ட்ராக்குக்குள் போகக்கூடாது என நான் முடிவு செய்துதான் இந்த ட்ராக்கில் பயணிக்கிறேன். இப்போது நான் இந்தியன் 2, ஜெயிலர் போன்ற படஙக்ளில் நடித்துவருகிறேன். ஜெயிலர் மூலம் ரஜினியுடன் நல்ல பழக்கம் கிடைத்திருக்கிறது.

எதிர் நீச்சலில் ஏன் நடித்தேன்: திருச்செல்வம் ஏற்கனவே எழுதி இயக்கிய கோலங்கள் சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து அவர் என்னிடம் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் குறித்து சொல்லி மூன்று மணி நேரம் கதை சொன்னார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் நான் இந்த சீரியலில் நடிக்க ஒத்துக்கொண்டேன். அதோடு பெண்களை வில்லன்களை பெண்கள் ரசிப்பது ஆச்சரியம். இந்த சீரியல் மூலம் பெண்களுக்கு என்னை பிடித்திருக்கிறது.
திருப்தி அடையமாட்டேன்: எதிலும் நான் எளிதாக திருப்தி அடையமாட்டேன். இதை இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என சொல்லிக்கொண்டிருப்பேன். இந்த நாடகத்திலும் அப்படித்தான் என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய யோசித்து என் வேலையை செய்வேன். ஆதிகுணசேகரன் போல் உண்மையிலேயே சிலர் இருக்கிறார்கள். ஏன், சுரண்டையில்கூட ஒருவர் இன்னமும் இருக்கிறார். 1500 எபிசோடுகள் போகும் என திருச்செல்வம் சொல்லியிருக்கிறார். எனவே வேறு சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை. அமைந்தால் பார்க்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











