Marimuthu - எனக்கு கமல் ஹாசன் கோயிலே கட்டியிருப்பார்.. எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் ஓபன் டாக்

சென்னை: Marimuthu (மாரிமுத்து) தேவர் மகன் படத்தை பற்றி நான் புகழ்ந்திருந்ததை கமல் கேட்டிருந்தால் எனக்கு கோயிலே கட்டியிருப்பார் என எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து பேசியிருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்துவிடம் மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. அடிப்படையில் கட்டட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தவர். வைரமுத்துவிடம் 1989,1990,1991 ஆகிய மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்துவிட்டு உதவி இயக்குநராக மாறியவர்.

 Actor Marimuthu Talks about kamal haasan and thevar magan movie

உதவி இயக்குநர் டூ இயக்குநர்: அதனையடுத்து இயக்குநர் வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி உள்ளிட்ட படத்திலும், சீமானிடம் பாஞ்சாலங்குறிச்சி படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார் மாரிமுத்து. உதவி இயக்குநராக இருந்துவிட்டு பிரசன்னா, வடிவேலு, உதயதாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும், விமல், அனன்யா நடிப்பில் உருவான புலிவால் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார்.

நடிப்பில் அட்டகாசம் : ஒருகட்டத்தில் இயக்கத்திலிருந்து ஒதுங்கிய மாரிமுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மாரிமுத்துவின் நடிப்பு அனைவரையும் ஈர்க்க நடிப்பதற்கு அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட மாரிமுத்து தனது எதார்த்த நடிப்பில் தற்போது ஜொலித்துவருகிறார். குறிப்பாக பரியேறும் பெருமாள், மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது.

 Actor Marimuthu Talks about kamal haasan and thevar magan movie

ஆதிகுணசேகரன்: சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கிவருகிறார். எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவரது நடிப்பும், டயலகா டெலிவரியும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மேலும் சமூக வலைதளங்களில் ஆதிகுணசேகரன் தொடர்பான வீடியோவும் அடிக்கடி ட்ரெண்டாவது வழக்கம்.

மாரிமுத்து பேட்டி: இந்நிலையில் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவர் மகன் படம் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில், "தேவர்மகன் படம் பார்த்தபோது எனக்குள் என்ன அதிர்வு ஏற்பட்டதோ, அதே அதிர்வுதான் சீமானுக்கும் ஏற்பட்டது. இரவு காட்சியில் தேவர் மகனை பார்த்து விட்டு, டீ குடிக்க நானும், சீமானும் நடந்து சென்றபோது, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பேசிக்கொண்டே சென்றோம். தேவர் மகன் குறித்து நாங்கள் புகழ்ந்ததை கேட்டிருந்தால் எனக்கும், சீமானுக்கும் கமல் கோயிலே கட்டி இருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X