Marimuthu: கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க கூப்பிட்ட ராதிகா.. மறுத்த மாரிமுத்து.. என்ன காரணம்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் தொடரில் வெங்கட், ரேஷ்மா, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

முன்னதாக சஞ்சீவ் இந்தத் தொடரில் கமிட்டாகியிருந்த நிலையில், அவர் திடீரென சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். இதற்கான காரணம் குறித்து அவர் வெளிப்படுத்தவில்லை.

Actor Marimuthu was the first choice for SACs character in Kizhakku vaasal serial

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒளிபரப்பாகவுள்ள இந்த் தொடரில் நடிகர் ஆனந்த் பாபுவும் முதன்மை கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

கிழக்குவாசல் தொடரில் எஸ்ஏசி கேரக்டருக்கு முன்னதாக மாரிமுத்துவை அணுகிய ராதிகா: விஜய் டிவியில் அடுத்தடுத்த சீரியல்கள் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது எதிர்நீச்சல். இந்தத் தொடரில் வெங்கட், ரேஷ்மா, எஸ்ஏ சந்திரசேகர், ஆனந்த்பாபு உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தத் தொடரில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

முன்னதாக இந்த தொடரின் லீட் கேரக்டரில் சஞ்சீவ் கமிட்டாகியிருந்தார். ஆனால் திடீரென அவர் சீரியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சஞ்சீவ், காரணம் குறித்து பேச மறுப்புத் தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்த ப்ராஜெக்ட்டில் ரசிகர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தத் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவாக நடித்துவரும் வெங்கட் லீட் கேரக்டரில் இணைந்துள்ளார்.

இதேபோல நடிகரும் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இந்தத் தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தத் தொடரின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த மாத இறுதியில் தொடர் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் தயாரித்து வருகிறார்.

Actor Marimuthu was the first choice for SACs character in Kizhakku vaasal serial

இந்நிலையில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக கலக்கிவரும் நடிகர் மாரிமுத்து முன்னதாக எஸ்ஏசி கேரக்டரில் நடிக்க தன்னை நடிகை ராதிகா அணுகியதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கிழக்கு வாசல் தொடர், சம்சாரம் அது மின்சாரம் படம் போன்ற கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் எஸ்ஏசி கமிட்டாகியுள்ள கேரக்டர் விசு கேரக்டர் போல என்று தன்னிடம் ராதிகா கூறியதாகவும் மாரிமுத்து கூறியுள்ளார்.

தான் ஜெயிலர் சூட்டிங்கில் இருந்தபோது தயாரிப்பாளரும் நடிகையுமான ராதிகா தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசியதாகவும் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஆனால் அந்தத் தொடரில் தான் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அது மிகப்பெரிய கேரக்டர் எனவும் அந்தக் கேரக்டரில்தான் தற்போது எஸ்ஏசி நடித்து வருவதாகவும் மாரிமுத்து மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X