அசலாக இருங்கள்… உலகம் உங்களை நகலெடுக்கட்டும்… குட்டி பவானியின் செம பஞ்ச்!
சென்னை : மாஸ்டர் மகேந்திரன், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்து வரும் டி43 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேந்திரன், குட்டி பவானி கெட்டப்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்கு மேல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

பஞ்சாயத்து சீன்
மாஸ்டர் மகேந்திரன் என்றால் அனைவருக்கும் தெரியும் அளவில் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்த திரைப்படம் தான் நாட்டாமை. இந்த திரைப்படத்தில் வெகுளித்தனமான பேச்சாலும், துறுதுறு நடிப்பாலும் அனைவரின் கவனத்தை பெற்றார் மகேந்திரன்.

2 முறை தேசிய விருது
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார். பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்ட இவருக்கு 2 முறை குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் ஒருமுறை நந்தி விருதும் கிடைத்தது.

நடிப்பில் அசத்தினார்
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் குட்டி பவானியாக நடித்து அசத்தி இருந்தார் மகேந்திரன். 10 நிமிடங்கள் மட்டுமே இந்த கதாபாத்திரம் வந்திருந்தாலும் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டை பெற்றது. இந்த ஆண்டுகளாக நிலைத்து இருந்த மாஸ்டர் மகேந்திரன் என்ற பெயரை, குட்டி பவானி மகேந்திரன் என்று பெயர் மாற்றம் செய்ய வைத்துள்ளது இந்த கதாபாத்திரம்.

குட்டி பவானி கெட்டப்பில்
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வரும் மகேந்திரன். சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர், குட்டிபவானி கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அசலாக இருங்கள் உலகம் உங்களை நகலெடுக்கட்டும் என்று ஒரு பஞ்சிங்கை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











