நைட் 2 மணிக்கு கேட்குற கேள்வியா இது… தீர்ப்புகள் விற்கப்படும் விழாவில் மயில்சாமி கலகல பேச்சு !

சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தீர்ப்புகள் விற்கப்படும்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கி உள்ள இத்திரைப்படம் டிசம்பர் 24ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் மயில்சாமி கலந்து கொண்டு கலகலப்பாக பேசினார்.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் தீர்ப்புகள் விற்கப்படும். இதில், சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

எடுப்பதில்லை

எடுப்பதில்லை

இதில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி, எவ்வளவு விலை உயர்த்த போன் வைத்து இருந்தாலும் சிலர் போன் செய்தால் எடுப்பதே இல்லை என்றார். என்னை யார் எப்போது அழைத்தாலும், அவர்களுக்கு நான் பதிலளிப்பேன் என்றார்.

நைட் கேட்குற கேள்வியா இது

நைட் கேட்குற கேள்வியா இது

ஒரு நாள் நைட் 2 மணிக்கு ஒருவர் எனக்கு போன் செய்து எந்த நடிகையை.. எந்த நடிகர் வெச்சி இருக்கானு கேட்டார்... யார் யாரை வெச்சி இருந்த எனக்கு என்ன.. நைட் 2 மணிக்கு கேட்கும் கேள்வியா இது, என்ன பார்த்து ஏன் கேட்டானு யோசித்து என் தூக்கமே போச்சு இதனால், நைட் நான் போனை ஆன் செய்து வைப்பதே இல்லை என்று கலகலப்பாக பேசினார் மயில்சாமி.

நிஜ ஹீரோக்களை போற்றுங்கள்

நிஜ ஹீரோக்களை போற்றுங்கள்

முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், இன்று என் வாழ்க்கையில் பெருமையான நாள். ஏன்னா நிஜ ஹீரோக்களுக்கு மத்தியில் நிழல் ஹீரோ உட்காந்திருக்கேன். போற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான். நிழல் ஹீரோக்களை பார்த்து கைத்தட்டுங்கள் விசிலடியுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் நிஜ ஹீரோக்களைதான் நாம் போற்ற வேண்டும் என்றார்.

பலர் பங்கேற்றனர்

பலர் பங்கேற்றனர்

சென்னையில் நடை பெற்ற இவை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சிபி, மயில்சாமி, நீதியரசர் சந்துரு, திலகவதி ஐபிஎஸ், பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X