எனக்கு டிவிட்டரில் அக்கவுண்ட் இல்லை.. அதை யாரும் பின்தொடர வேண்டாம்.. பிரபல நடிகர் விளக்கம்!
சென்னை: தனது பெயரில் டிவிட்டரில் வலம் வரும் கணக்கு குறித்து பிரபல நடிகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி.
1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி.

முக்கிய கதாப்பாத்திரம்
இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

முறுங்கைக்காய் சிப்ஸ்
கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் மயில்சாமி. தற்போது முறுங்கைக்காய் சிப்ஸ் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை வெள்ளம்
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகர் மயில்சாமி. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

கவுண்டமணிக்கு வாழ்த்து
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயில்சாமி டிவிட்டரில் இணைந்து விட்டதாக கூறி அவரது பெயரில் டிவிட்டர் கணக்கு ஒன்று வைரலாகி வந்தது. மேலும் அன்றைய தினம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் என்பதால் அந்த கணக்கில் இருந்து வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

ரொம்ப லேட்
இதனை பார்த்த நெட்டிசன்கள், டிவிட்டரை முடக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது, இந்த நேரத்தில் வந்துள்ளீர்களே என கேட்டு வந்தனர். இன்னும் சிலர் இந்த கணக்கில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது, ஆகையால் வீடியோ வெளியிடுங்கள் என கூறி வந்தனர்.

டிவிட்டரில் கணக்கு இல்லை
இந்நிலையில் தனது பெயரில் உலா வரும் டிவிட்டர் கணக்கு குறித்து நடிகர் மயில்சாமி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை, தன்னுடைய பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானவை. அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டேன். அதை யாரும் பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











