வடிவேலு நீங்க இப்டி பண்ணலாமா?.. மயில்சாமி நண்பர் வேதனை

சென்னை: மயில்சாமி உயிரிழந்தபோது வடிவேலு இப்படி செய்திருக்கக்கூடாது என மயில்சாமியின் நண்பர் வேதனையுடன் கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர், பல குரல் மன்னன் என ஜொலித்தவர் மயில்சாமி. வடிவேலு, விவேக் என முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவைகள் காலங்கடந்து பேசப்படுபவை. நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியவர் மயில்சாமி ஆவார்.

உதவிக்கு பெயர்போன மயில்சாமி

உதவிக்கு பெயர்போன மயில்சாமி

மயில்சாமி தான் வாழ்ந்த காலம்வரை பலருக்கும் பல உதவிகளை செய்துவந்தவர். கஷ்டப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது என பல உதவிகளை செய்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் தனது வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்தெல்லாம் உதவி செய்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரி அன்று உயிர்போனது

சிவராத்திரி அன்று உயிர்போனது

தீவிர சிவபக்தரான மயில்சாமி கடந்த சிவராத்திரி அன்று விடிய விடிய விழித்திருந்தார். ஏற்கனவே அவருக்கு மூன்றூ இதய அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சிவன் மீது பக்தியின் காரணமாக அன்றைய தினம் விழித்திருந்தார். காலை வீட்டுக்கு சென்ற பிறகுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது இறுதி அஞ்சலியின்போதும், இறுதி ஊர்வலத்தின்போது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மயில்சாமி நண்பரின் பேட்டி

மயில்சாமி நண்பரின் பேட்டி


இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மயில்சாமி இறந்த செய்தி கிடைத்தவுடன் முதல் ஆளாக நான்தான் அவரது வீட்டிற்கு சென்று சாங்கியதற்கு தேவையானதை செய்த தொடங்கினேன். பின்னர்தான் மற்றவர்கள் வர தொடங்கினார்கள். மயில்சாமியின் இறுதிச்சடங்கில் கண்டிப்பாக நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டிருக்க வேண்டும். என்னதான் பிஸியாக இருந்தாலும் அனைத்து நடிகர்களும் சென்னையில்தான் இருக்கிறார்கள். எனவே அங்கு வந்து செல்வதில் பிரச்னை இருந்திருக்காது.

சூப்பர் ஸ்டாரே வந்தார்; சின்ன நடிகர்களுக்கு என்ன?

சூப்பர் ஸ்டாரே வந்தார்; சின்ன நடிகர்களுக்கு என்ன?

சொல்லப்போனால் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரே படப்பிடிப்பில் இருந்துவந்து மயில்சாமியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது மற்ற சிறிய நடிகர்கள் வருவதற்கு என்ன. மயிலசாமியின் மறைவு செய்தியை கேட்ட நடிகர் சித்தார்த் போன்றவர்கள் விரைவில் வந்துவிட்டனர். ஏனென்றால் அவர்களுடன் மயில்சாமி மிகவும் நெருங்கி பழகினார்.

வடிவேலு நீங்கள் இப்படி செய்யலாமா - மயில்சாமி நண்பர் கேள்வி

வடிவேலு நீங்கள் இப்படி செய்யலாமா - மயில்சாமி நண்பர் கேள்வி

இப்படி இருக்க நடிகர் வடிவேலு என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரும் மக்களை சிரிக்க வைப்பவர்தான். ஆனால் வாழக்கை என்று வரும்போது எந்த விஷயத்தையும் யாருக்காகவும் இறங்கி செய்யமாட்டார். மக்களுக்கும் எதுவும் செய்தது கிடையாது. ஆனால் நடிகர் விவேக் மக்களுக்காக அதிகம் செய்திருந்தார் அதனால்தான் அவரின் மறைவின்போது அவ்வளவு கூட்டம் வந்தது. அதேபோல் மயில்சாமியும் செய்ததால்தான் அவரது மறைவுக்கும் கூட்டம் வந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X