அடக்கடவுளே.. அவருக்கா இப்படி.. கண்கள் குளமானது.. நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ!

சென்னை : நடிகர் மயில்சாமி கடைசி வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வீடியோவைப் பார்த்தவர்கள் அடக்கடவுளே.. அவருக்கா இப்படி என கண்கலங்கி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர்,குணசித்திர நடிகர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவரான மயில்சாமி. பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் அவருக்கு வயது 57. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி மஹாசிவராத்தியை முன்னிட்டு, கோவளத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அதிகாலையில் நான்கு மணி அளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். அதன் பின் சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்த அவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி தருணம்

கடைசி தருணம்

நடிகர் மயில்சாமி, நேற்று இரவு உள்ள மேகநாதேஸ்வரர் ஆலையத்தில் நடைபெற்ற இரவு பூஜையில் கண்விழித்து ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ஓம்காரம் பாடலை பாடினார். அதிகாலை 3 மணி முதல் கோவிலில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி அடக்கடவுளே இவருக்கா இப்படி என புலம்பி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மயில்சாமியின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மயில்சாமியின் உடலைப்பார்த்த எம்எஸ் பாஸ்கர் கதறி அழுதார். மனோபாலா, ட்ரம்ஸ் சிவமணி மற்றும் பல நடிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அல்லது நாளை காலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிகிறது.

முதல்வர் இரங்கல்

முதல்வர் இரங்கல்

முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி. திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது என இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

அதே போல, ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சார்லி, விக்ரம், யோகி பாபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், வையாபுரி, இயக்குநர் பாரதி ராஜா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடைசி டப்பிங்

அதேபோல நடிகர் மயில்சாமி நடித்த கிளாஸ்மேட்ஸ் என்கிற திரைப்படத்திற்காக நேற்று டப்பிங் பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதில், மாப்ள நான் சொல்றத கேளு மாப்ள. விஷயம் இது இல்லை. நான் அக்கா கிட்ட சொல்லி இருக்கேன், எல்லாமே அவ பாத்துப்பா. இங்க பாரு, நீ யாருக்கும் மனசுல துரோகம் நினைக்காம இரு என பேசியுள்ளார் மயில்சாமி. இந்த வீடியோடிவைப் பார்த்து ரசிகர்கள் கண்கலங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X